இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள படங்கள்!

விஜய்யின் பீஸ்ட் தற்போது சன் நெக்ஸ்ட்/நெட்ப்ளிக்ஸ் இயங்குதளத்தில் வெளியாகி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 12, 2022, 03:49 PM IST
  • இந்த வாரம் பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகிறது.
  • விஜய்யின் பீஸ்ட் படம் நெட்பிலிக்ஸில் வெளியாகிறது.
  • காஸ்மீர் பைல்ஸ் படம் ஜீ 5 தளத்தில் வெளியாகிறது.
இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள படங்கள்!  title=

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'பீஸ்ட்'.  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் மற்றும் சதிஷ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  அனிருத் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.  தற்போது இந்த படம் சன் நெக்ஸ்ட்/நெட்ப்ளிக்ஸ் இயங்குதளத்தில் வெளியாகி உள்ளது.

Beast Vijay

மேலும் படிக்க | தோனியுடன் இணையும் நயன்தாரா?

ரத்தீனா பி டி இயக்கத்தில்  மலையாள மொழியில் உருவாகியுள்ள ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படம் 'புழு'.  இப்படத்தில் மம்மூட்டி, வாசுதேவ் சஜிஷ், பார்வதி திருவொது, நெடுமுடி வேணு, ஆத்மியா ராஜன், மாளவிகா மேனன், ஸ்ரீதேவி உன்னி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  இப்படம் இந்த ஆண்டின் பாதியில் திரையில் வெளியிட திட்டமிடப்பட்டு பின்னர் நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டது.  மலையாளம், தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படம் மே-13ம் தேதி சோனி லிவ் இயங்குதளத்தில் வெளியாகுகிறது.

Puzhu

புதுமுக இயக்குனர் சந்தரா இயக்கத்தில் உருவான தமிழ் மொழித்திரைப்படம் 'கள்ளன்'.  மனிதர்களிடம் உள்ள கெட்ட எண்ணத்தின் மூலம் உருவாகும் விளைவு என்ன என்பதே இப்படத்தின் கதை.  இப்படத்தில் கரு.பழனியப்பன், சௌந்தர ராஜா மற்றும் நமோ நாராயணா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  கடந்த மார்ச் மாதம் வெளியான இந்த படம் தற்போது மே-13ம் தேதி ஜீ5 ஓடிடி இயங்குதளத்தில் வெளியாகுகிறது.  
 
விவேக் அக்னி ஹோத்ரி இயக்கத்தில் உருவான ஹிந்தி மொழித்திரைப்படம் 'தி காஷ்மீர் பைல்ஸ்'.  காஷ்மீரில் ஏற்பட்ட பிரச்னையின்போது இந்துக்கள் காஷ்மீரை விட்டு வெளியேறியதை இப்படம் கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டது.  கடந்த மார்ச் மாதம் வெளியான இந்த படத்தில் மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி, சின்மயி மண்டலேகர், பிரகாஷ் பெலவாடி மற்றும் புனித் இஸ்ஸார் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  குறைந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை படைத்தது.  தற்போது இந்த படம் மே-13ம் தேதி ஜீ5 ஓடிடி இயங்குதளத்தில் வெளியாகுகிறது.

TheKashmirFiles

எலிசபெத் ஆலன் ரோசன்பாம் இயக்கத்தில் உருவான அமெரிக்க காமெடி திரைப்படம் 'ஸ்னீகெரல்லா'.  இப்படத்தில் சூசன் ஜேகோப்ஸ், லெக்சி அண்டர்வுட், ஜான் சேலி, டெவின் நெகோடா, ராபின் அலோமர் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  சிண்ட்ரெல்லா படத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.  இந்த திரைப்படம் மே-13ம் தேதி டிஸ்னி பல்ஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி இயங்குதளத்தில் வெளியாகவுள்ளது.

'பல்லு படமா பாத்துக்கோ' படத்தை இயக்கிய விஜய் வரதராஜ், தற்போது இயக்கியுள்ள வெப் தொடர் தான் 'குத்துக்கு பத்து'.  இந்த வெப் தொடரை டி கம்பெனி சார்பில் ஏகேவி துரை தயாரித்து இருக்கிறார்.  எட்டு எபிசோடுகளாக உருவாக இருக்கும் இந்த வெப் தொடரில் விஜய் வரதராஜ், ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட்,  பிக் பாஸ் புகழ் சம்யுக்தா, திவாகர், திலீபன், சாரா, அப்துல், அகஸ்டின், பத்ரி, செங்கி வேலு, ஜானி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  காதல் விவகாரத்தை மையமாக வைத்து டார்க் காமெடியாக உருவாகியுள்ள இந்த வெப் தொடர் மே-13ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

KuthukkuPathu

மேலும் படிக்க | தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தை OTT-ல் பார்ப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News