முன்னர், திரைப்படங்களுக்கு அதிகளவில் ரசிகர்கள் இருந்தனர். இப்போது, அதே அளவிற்கு சீரியல்களுக்கும் ரசிகர்கள் கூட்டம் சேர்ந்துள்ளது. இல்லத்தரசிகள் பார்த்து வந்த சீரியல்களை தற்போது இளசுகளும், வயதானவர்களும் கூட பார்த்து வருகின்றனர். படங்கள் வெற்றி பெற்றுள்ளதா இல்லையா என்பதை வசூல் தீர்மானிப்பதை போல, சீரியல்களின் வெற்றியை டி.ஆர்.பி தீர்மானிக்கிறது. இந்த வருடத்தின் 48வது வாரத்தில் எந்த சீரியல் டாப் இடத்தை பெற்றுள்ளது என்பதை பார்க்கலாமா?
பின்வாங்கிய ‘எதிர்நீச்சல்’ தொடர்..!
டி.ஆர்.பியில் கடந்த சில வாரங்களாக எதிர்நீச்சல் தொடர்தான் முதலிடத்தில் இருந்தது. ஆனால், அத்தொடரில் முக்கிய கதாப்பாத்திரமாக வந்து ‘ஆதி குணசேகரன்’ கதாப்பாத்திரத்தில் மாரி முத்து நடித்து வந்தார். அவர், மாரடைப்பால் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். தற்போது அந்த கதாப்பாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். இருப்பினும், மாரி முத்து அளவிற்கு அவரை ஆதி குணசேகரனாக ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில், எதிர்நீச்சல் சீரியலி டி.ஆர்.பியில் அடி வாங்கியுள்ளது. எப்போதும் டாப் லிஸ்டில் இருந்த எதிர்நீச்சல், 9.80 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இதனால் எதிர்நீச்சல் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
டாப்பில் இருக்கும் சீரியல்!
இந்த வாரம் டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும் சீரியல், சிங்கப்பெண்ணே. சகோதரிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதற்காக தங்கை வேலை செய்கிறார். இதை வைத்து எடுக்கப்பட்டுள்ள சீரியல்தான் இது. இந்த சீரியலுக்கு 11.80 புள்ளிகளை பெற்று டாப் சீரியலாக இடம் பெற்றுள்ளது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம்..
இரண்டாவது இடத்தில் இடம் பெற்றுள்ள சீரியல், கயல். ஒரு குடும்பத்தையே தாங்கும் பெண்ணை வைத்து இந்த கதை எழுதியுள்ளது. கயல் தொடர், 11.16 புள்ளிகளை பெற்றுள்ளது.
மூன்றாவது இடத்தில் உள்ள சீரியல், சுந்தரி. இந்த தொடருக்கு 10.42 புள்ளிகள் கிடைத்துள்ளது. பல்வேறு திருப்பங்களுடன் இருக்கும் இந்த தொடரை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
மேலும் படிக்க | இந்தியாவின் பணக்கார சினிமா குடும்பம் இதுதான்! சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் இடம் பெற்றுள்ள தொடர்..
ஆரம்பத்தில் டாப் 3 பட்டியலில் இடம் பெற்றிருந்த வானத்தை போல தொடர், இந்த வாரம் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த தொடருக்கு தற்போது 9.59 புள்ளிகள் கிடைத்துள்ளது.
அறாவது இடத்தில் இனியா தொடர் இடம்பெற்றுள்ளது. மாமனாரின் சதிகளை மீறி இனியா தன் முயற்சிகளில் வெற்றி பெருவாரா எனும் கேள்விகளுடன் இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடருக்கு 8.52 புள்ளிகள் கிடைத்துள்ளது.
7 மற்றும் 8வது இடம்..
டாப் 10 லிஸ்டில் 7வது இடத்தில் ஆனந்த ராகம் தொடர் இடம் பெற்றிருக்கிறது. இந்த தொடருக்கு, 8.28 புள்ளிகள் கிடைத்துள்ளது. இந்த தொடர், மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும்.
முதல் 7 இடங்களை பெற்ற அனைத்து தொடர்களும் முன்னணி சேனல் ஒன்றின் தொடராகும். 8வது இடத்தில் இருக்கும் தொடர், வேறு சேனலுடையது. பாக்கியலக்ஷ்மி தொடர், 7.89 புள்ளிகளை பெற்று 8வது இடத்தில் இருக்கிறது. இந்த தொடரும் தினம் தினம் புதுப்புது ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
9 மற்றும் 10 வது இடம்..
9வது இடத்தில் இடம் பெற்றுள்ள தொடர், சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு 7.83 புள்ளிகள் கிடைத்துள்ளது. 10வது இடத்தில் இருக்கும் தொடர், ஆஹா கல்யாணம். விருப்பமில்லாமல் காதலித்த பெண்ணின் தங்கையை திருமணம் செய்து கொள்ளும் கதாநாயகனுக்கும் அவனது மனைவிக்கும், குடும்பத்தினருக்கும் இடையே நடக்கும் கருத்து மோதல்கள்தான் இதன் கதை. இந்த தொடர், டிஆர்பி ரேட்டிங்கில் பத்தாவது இடத்தை பெற்றுள்ளது. இதற்கு 7.21 புள்ளிகள் பெற்றுள்ளது.
மேலும் படிக்க | வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு ஓடிச்சென்று உதவிய அரந்தாங்கி நிஷா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ