UAE வழங்கிய கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழ் நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷாவுக்கு மதிப்புமிக்க கோல்டன் விசாவை வழங்கி கெளரவித்தது ஐக்கிய அரபு அமீரக அரசு

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 3, 2021, 09:27 PM IST
  • நடிகை த்ரிஷாவுக்கு கோல்டன் விசா
  • கோல்டன் விசாவை கொடுத்து சிறப்பு செய்தது யு.ஏ.இ அரசு
  • இந்த சிறப்பு விசா பெறும் முதல் தமிழ் நடிகை த்ரிஷா
UAE வழங்கிய கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழ் நடிகை த்ரிஷா   title=

ஐக்கிய அரபு அமீரக அரசு நடிகை த்ரிஷாவுக்கு மதிப்புமிக்க கோல்டன் விசா வழங்கி சிறப்பு செய்தது. தமிழ் சினிமாவில் இந்த பெருமையை பெறும் முதல் பிரபலம் நடிகை த்ரிஷா கிருஷ்ணன். த்ரிஷா இரண்டு தசாப்தங்களாக தமிழ் சினிமாவில் சிறந்த கதாநாயகியாக தடம் பதித்துள்ளார். தற்போது, பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகை திரிஷா.

2022இல் திரிஷா பல புதிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்திடமிருந்து ஒரு மதிப்புமிக்க கவுரவத்தைப் பெற்ற புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை திரிஷா.
"ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கொடுக்கும் கோல்டன் விசாவைப் பெற்ற முதல் தமிழ் நடிகை என்ற பெருமையும் பாக்கியமும் எனக்கு கிடைத்துள்ளது... நன்றி" என்று பதிவிட்டு, அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட் வழங்கிய கோல்டன் விசா பத்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இந்த விசா வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு சோதனை எளிமையாக இருக்கும். இந்த விசா யு.ஏ.இக்கு பல முறை செல்லலாம், இந்த கோல்டன் விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத்துணை, குழந்தைகள், குடும்பத்திற்கும் விசா பயன் நீட்டிக்கப்படுகிறது.

பிரபல நடிகர்கள் ஷாருக்கான், மம்முட்டி, மோகன் லால், டோவினோ தாமஸ், துல்கர் சல்மான், பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் போனி கபூர் உள்ளிட்ட பல இந்திய பிரபலங்கள் 
இந்த ஆண்டு, கோல்டன் விசாவைப் பெற்றுள்ளனர்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் பச்சன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம் மற்றும் பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பில் உருவாகும்  'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் த்ரிஷாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Also Read | நடிகர் விஜய் சேதுபதி தாக்கப்படும் வீடியோ வைரல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News