"உலகம் விலைக்கு வருது" படப்பிடிப்பு ஆரம்பம்

Last Updated : Nov 1, 2017, 12:22 PM IST
"உலகம் விலைக்கு வருது" படப்பிடிப்பு ஆரம்பம் title=

தேன்மொழி சுங்குரா தயாரிப்பில், தம்பிராமையா இயக்கத்தில் அவரது மகன் உமாபதி நடிக்கும் படம் "உலகம் விலைக்கு வருது". தம்பிராமையா மகன் உமாபதிக்கு ஜோடியாக மிருதுளா முரளி நடிக்கிறார். இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், சமுத்திரகனி, ராதாரவி, விவேக் பிரசன்னா, YG மகேந்திரன், பவன், நான் கடவுள் ராஜேந்திரன், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்,  சிங்கம்புலி, சாமிநாதன், ஸ்ரீஜா ரவி, ஸ்ரீரஞ்சனி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்

நேற்று (செவ்வாய்க்கிழமை) புதுக்கோட்டை மாவட்டம் மலையக்கோயில் கிராமத்தில் உள்ள மலையக்கோயில் 7-ம் நூற்றாண்டின் முருகன் கோயிலில் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு முதல் நாள் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இந்த படம் புதுக்கோட்டை, அம்பாசமுத்திரம், தென்காசி, குற்றாலம் ஆகிய இடங்களில் படமாக்கப்படுகிறது. இந்த படத்திற்கு இசை தினேஷ் அமைக்கிறார்.

Trending News