ஏ.ஆர்.முருகதாஸின் புதிய படம் பற்றிய அப்டேட்!

ஏ ஆர் முருகதாஸ் அடுத்ததாக ஒரு அனிமேஷன் படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Sep 23, 2021, 01:20 PM IST
ஏ.ஆர்.முருகதாஸின் புதிய படம் பற்றிய அப்டேட்!

நடிகர் அஜித்தை வைத்து 2001ஆம் ஆண்டு தீனா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ ஆர் முருகதாஸ்.  அதன்பிறகு 2002ஆம் ஆண்டு விஜயகாந்தை வைத்து ரமணா என்ற சூப்பர்ஹிட் திரைப்படத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.   2005 ஆம் ஆண்டு சூர்யாவை வைத்து கஜினி என்ற படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான இயக்குனரான முருகதாஸ்.  இதே படத்தை 2008ஆம் ஆண்டு ஹிந்தியில் அமீர்கானை வைத்து இயக்கி அங்கும் ஒரு வெற்றி இயக்குனராக வளர்ந்தார். 

murugadoss

மீண்டும் சூர்யாவுடன் ஏழாம் அறிவு, விஜயுடன் துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என மாஸ் ஹிட் திரைப்படங்களை இயக்கினார்.  இயக்குனராக மட்டுமில்லாமல் எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, ராஜா ராணி, மான் கராத்தே, பத்து என்றதுக்குள்ள போன்ற படங்களை தயாரிக்கவும் செய்தார்.  தன் உதவி இயக்குனர்களை இயக்குனராக மாற்றுவதற்கும் அவர்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறார்.  தனது நீண்ட நாள் கனவான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.  2020 ஆம் ஆண்டு ரஜினி முருகதாஸ் கூட்டணியில் தர்பார் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த திரைப்படம் வெளிவந்தது.  ஆனால் இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் படுதோல்வி அடைந்தது.   அதன்பின் மீண்டும் விஜய்யை வைத்து இயக்கப் போவதாக தகவல்கள் வெளியானது, ஒரு நேர்காணலிலும் முருகதாஸ் இதனைத் தெரிவித்திருந்தார்.

murugadoss

ஆனால் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை, விஜயும் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  தற்போது முருகதாஸ் விலங்குகளை மையமாக வைத்து ஒரு அனிமேஷன் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்த படத்திற்கான முழு வேளையில் முருகதாஸ் இறங்கியுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.  ஹாலிவுட் படங்களைப் போல முழுக்க முழுக்க கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இப்படத்தை இயக்க உள்ளார் முருகதாஸ்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News