நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜூலை மாதம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.படத்தில் விஜய் ஆப் டெவலப்பராக நடிப்பதாக கூறப்படுகிறது. சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துவருகிறது. படத்தில் பிரபு, சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தில்ராஜூ படத்தை தயாரிக்கிறார்.
படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்தச் சூழலில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகுமென்று ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் விதமாக சமீபத்தில் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இசையமைப்பாளர் தமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் புகைப்படத்தை பகிர்ந்து தீபாவளி என்று குறிப்பிட்டிருந்தார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாவதைத்தான் தமன் இவ்வாறு கூறியிருக்கிறார் என பதிவிட்டுவந்தனர்.
இதனையடுத்து சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், 'ப்ரின்ஸ்' படத்தில் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட தமன், இந்த தீபாவளிக்கு ‘வாரிசு’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என்பதை உறுதி செய்தார். இதனால் இன்று வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Happy Diwali nanba
Next week la irundhu summa pattasa irukum #VarisuPongal #Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @KarthikPalanidp @Cinemainmygenes @scolourpencils @vaishnavi141081 #Varisu pic.twitter.com/g0Hbp5cfSx
— Thalapathy Films (@ThalapathyFilms) October 24, 2022
இந்நிலையில் வாரிசு படத்தின் புதிய போஸ்டர் தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருக்கிறது. அந்தப் போஸ்டரில் விஜய் கறுப்பு சட்டை, கறுப்பு பேண்ட்டில் மாஸாக இருக்கிறார். மேலும் அந்தப் போஸ்டரில் தீபாவளி வாழ்த்து தெரிவித்து படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வாரிசு படத்தின் இந்தப் போஸ்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும் படிக்க | கமல் ஒரு மங்கி... ஜிபி முத்துவுக்கு எஸ்.வி.சேகர் ஆதரவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ