நெட்ஃப்ளிக்ஸ் ( Netflix ) நிறுவனம் தங்களது முதல் தமிழ் திரைப்படமான “பாவ கதைகள்” திரைப்படத்தை இன்று அறிவித்துள்ளார்கள். இந்த ஆந்தாலஜி படத்தை கௌதம் மேனன் (Gautham Menon) , சுதா கொங்குரா (sudha kongara) , வெற்றி மாறன் (Vetrimaaran) , விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) கியோர் இயக்கியுள்ளார்கள்.
பாவ கதைகள் காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை கூறும் நான்கு அழகான கதைகளை ஆந்தாலஜி வகையில் சொல்லும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலா வின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள்.
ALSO READ | பணத்தை செலவழிக்காமல் நீங்கள் Netflix-ல் படம் பார்க்கலாம்!! எப்படி என்று தெரியுமா?
Netflix தளத்தில் இப்படத்தினை 190 நாடுகளில் ப்ரத்யேகமாக இப்படத்தினை வெளியிடுகிறது. இந்த படத்தில் அஞ்சலி, பவானி ஶ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ஹரி, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு, கல்கி கொச்சிலின், பதம் குமார், பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி, மற்றும் சிம்ரனுடன் மேலும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
“பாவ கதைகள்” குறித்து பேசிய இயக்குனர் கௌதம் மேனன் ஒரு அறிக்கையில், "நம்பமுடியாத திறமையான இயக்குனர்களுடன் ஒரு சிக்கலான, கடினமான கருப்பொருளை உண்மையான மற்றும் நேர்மையான முறையில் ஆராய்வது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. பெருமை, மரியாதை மற்றும் சமூக நிலைப்பாடு நம்மைச் சுற்றியுள்ள தனிப்பட்ட தேர்வுகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இந்த புராணம் பிரதிபலிக்கிறது. ”என்றார்.
படம் குறித்து சுதா கொங்குரா கூறியதாவது, ’இப்படத்தில் உள்ள ஒவ்வோரு கதைகளும் எந்த தடைகளும் இல்லாமல் நம் சினிமா வழக்கத்திற்கு மாறான கட்டுக்கடங்காத அன்பை கூறும் கதைகளாகும். மிக உயர்ந்த தரத்திலான இந்த படைப்பு இந்தியாவையும் கடந்து உலகம் முழுதும் உள்ள ரசிகர்களை Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் வழியே சென்றடைவது, பெரும் மகிழ்ச்சியை தருகிறது’ என்றார்.
விக்னேஷ் சிவன் கூறியதாவது, Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவன படைப்புகளின் தீவிர ரசிகன் நான். ஒரு படைப்பாளனாக மாறுபட்ட கதையினை, முழுதாக அங்கீகரிக்கும் மூன்று பெரும் இயக்குநருடன் இணைந்து கூறும் வாய்ப்பு மிகப்பெரிய பரிசாகும். இக்கதைகள் நம் தமிழ் சமூகத்தில் உறவுகளின் வேதனையளிக்கும் இருண்மை மிக்க பக்கத்தினை நாம் உணரும்படி வெளிச்சமிட்டு காட்டும் என்றார்.
நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் படம் பாவ கதைகள் ஆகும். முன்னதாக, பாலிவுட் இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், சோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோஹர் ஆகியோர் நெட்ஃபிக்ஸ் படங்களான லஸ்ட் ஸ்டோரீஸ் (2018) மற்றும் கோஸ்ட் ஸ்டோரீஸ் (2020) படங்களுக்கு ஒத்துழைத்திருந்தனர்.
ALSO READ | ‘குஞ்சன் சக்சேனா – தி கார்கில் கேர்ள்’ படத்திற்கு தடை விதிக்க HC மறுப்பு!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR