விஜய்யை பற்றி ஒரு வார்த்தை: மனம் திறந்த பூஜா ஹெக்டே!

விஜய்யின் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே  

Written by - ZEE Bureau | Last Updated : Oct 18, 2021, 02:08 PM IST
விஜய்யை பற்றி ஒரு வார்த்தை:  மனம் திறந்த பூஜா ஹெக்டே!

நெல்சன் இயக்கத்தில் விஜய் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே விஜய்யுடன் முதல் முறையாக நடிக்கிறார், மேலும் இவர் நடிக்கும் இரண்டாவது தமிழ் படமும் இதுவே.  2012ம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தில் அறிமுகமானார் பூஜா ஹெக்டே.  

கடந்த மாதம் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.  அதற்கான சென்னை வந்திருந்தார் பூஜா.  தற்போது பீஸ்ட் படம் இறுதி கட்ட படப்பிடிப்பில் வேகமாக நடைபெற்று வருகிறது.  சினிமா நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றனர்.  அந்த நகையில் இன்று ரசிகர் ஒருவர் நடிகர் விஜய்யை பற்றி ஒரு வரியில் சொல்லுமாறு கேட்டார்.  "ஒருவரியில் பதில் சொல்வது கடினம், இருந்தாலும் முயற்சி செய்கிறேன்..SWEETEST" என்று பதில் கூறினார் பூஜா.  

ALSO READ 12 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் விஜய் - பிரகாஷ்ராஜ் கூட்டணி!

பூஜா ஹெக்டேவின் இந்த பதில் தற்போது சமூக வலைதளங்ளில் வைரலாகி வருகிறது.  மேலும் பூஜா ஹெக்டே நடித்து வரும் ராதே சியாம் படம் பற்றிய கேள்விக்கு "Epic Love story. Grand, fairytale visuals" என்று பதிலளித்தார்.  உங்களது ரசிகர்களை பற்றிய சொல்லுங்கள் என்று கேட்டதற்கு "Protective" என்று கூறியுள்ளார்.    இதனால் பூஜா ஹெக்டேவின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.  பல போராட்டங்களுக்குப் பிறகு மிகப்பெரிய நடிகை ஆகி உள்ளீர்கள், ஆரம்ப கால கஷ்டங்களை பற்றி சொல்லுங்கள் என்ற கேள்விக்கு, தொடக்கத்தில் இது நிச்சயமாக ஒரு சவாலாக இருந்தது, எனக்கு வேலை இல்லாத நேரங்கள் எனக்கு நினைவிருக்கிறது, ஆனால் நீங்கள் உங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் உங்கள் வேலையில் வைத்து கடினமாக உழைத்தால், அது உங்களுக்கு பல மடங்கு வெற்றியாக வரும் என்று கூறினார். 

 

பீஸ்ட் திரைப்படத்தினை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடலாம் என்று படக்குழு முடிவெடித்துள்ளது.

ALSO READ தீபாவளி வெளியீட்டில் இருந்து தள்ளி போகும் மாநாடு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News