காசாளர் முதல் கணக்காளர் வரை..! விஜய்சேதுபதி செய்த வேலைகள்

திரைத்துறையில் உட்சநட்சத்திரமாக இருக்கும் விஜய் சேதுபதி, திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு காசாளர் முதல் கணக்காளர் வரை என ஏராளமான வேலைகளை செய்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 16, 2022, 03:46 PM IST
காசாளர் முதல் கணக்காளர் வரை..! விஜய்சேதுபதி செய்த வேலைகள் title=

தமிழகத்தின் மக்கள் செல்வனாக இருக்கும் விஜய் சேதுபதி, இன்று 44-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை அனுப்பி வருகின்றனர். இப்போது இருக்கும் விஜய் சேதுபதி, இந்த உயரத்தை அடைய பட்ட கஷ்டங்கள், கண்ட கனவுகள், விழிந்திருந்த இரவுகள் ஏராளம். அவருடைய பயணம் வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கு உந்துசக்தியாக இருக்கும். 

ALSO READ | பத்திரிக்கையாளர் சந்திப்பில் எமோஷன் ஆன விஷால்..!

தென்னிந்திய திரைத்துறையில் உட்சநட்சத்திரங்களுள் ஒருவராக இருக்கும் அவர், திரைத்துறையில் ஜொலிக்க வேண்டும் என்ற ஆசை உடனடியாக நிகழ்ந்துவிடவில்லை. சினிமா கனவுடன் கோடம்பாக்கம் வந்த அவருக்கு வலிகளும், ஏமாற்றமும் மிஞ்சியது. இதனால், சினிமா கனவுடனேயே துபாய்க்கு பறந்தார். அங்கு சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனையாளர், பாஸ்ட்புட் கடையில் காசாளர், ஃபோன்பூத் ஆப்ரேட்டர் உள்ளிட்ட வேலைகளை செய்துள்ளார். 

இந்தியாவில் கிடைத்த ஊதியத்தைவிட துபாயில் 2 மடங்கு ஊதியம் அவருக்கு கிடைத்தது. ஊதியம் மட்டுமில்ல காதல் மனைவியும் கிடைத்தார். 2003 ஆம் ஆண்டு ஜெசிகாவை திருமணம் செய்து கொண்ட விஜய் சேதுபதி மீண்டும் சென்னை திரும்பி, சினிமா துறையில் பயணிக்கத் தொடங்கினார். முதலில் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்த விஜய்சேதுபதி, 2010 ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று மூலம் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். இப்போது வரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, ஹீரோ மட்டுமல்ல நல்ல வில்லனாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். எந்த கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்தாலும் விஜய் சேதுபதியை மக்கள் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதிக்கு டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அதில், சந்தையின் பின்போகாமல், கதையின் நாயகனாக முன்னிறுத்திக்கொள்ளும் விஜய் சேதுபதி அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

ALSO READ | ’எதற்கும் துணிந்தவன்’ டீமில் இணைந்த சிவகார்த்திகேயன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News