பத்திரிக்கையாளர் சந்திப்பில் எமோஷன் ஆன விஷால்..!

தன்னை பொறுத்தவரை கமலா சினிமாஸ் திரையரங்கம் இல்லை, அது ஒரு கோவில் என விஷால் தெரிவித்துள்ளார்.   

Written by - அதிரா ஆனந்த் | Edited by - S.Karthikeyan | Last Updated : Jan 15, 2022, 08:30 AM IST
பத்திரிக்கையாளர் சந்திப்பில் எமோஷன் ஆன விஷால்..! title=

நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர் விஷால், இயக்குநர் து.பா.சரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். நடிகர் மாரிமுத்து பேசும்போது, விஷால் ஆக்ஷனில் கலக்கி இருப்பதாக தெரிவித்தார். படத்தில் இடம்பெற்றிருக்கும் சண்டைக் காட்சிகள் தூள் பறக்கும் என தெரிவித்த அவர், விஷால் விரைவில் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறினார்.

ALSO READ | விஷாலுக்காக யுவன் பாடிய பாடல்! விரைவில் ரிலீஸ்..!

புதுமுக நடிகை டிம்பிள் ஹயாதி பேசும்போது, வீரமே வாகை சூடும் திரைப்படம் தனக்கு முதல் முழு நீளப்படம் எனத் தெரிவித்தார். படத்தில் வாய்ப்பளித்த இயக்குநர் சரவணனுக்கு நன்றி தெரிவித்த அவர், விஷால் தன்னுடைய இன்ஸ்பிரேஷன் எனக் கூறினார். இயக்குனர் து.ப.சரவணன் பேசும்போது, படம் நன்றாக வந்திருப்பதாக கூறினார். இதற்கு முக்கிய காரணம் விஷால் மற்றும் கருந்தேள் ராஜேஷ் எனக் கூறிய அவர், இருவருக்கும் நன்றி தெரிவித்தார்.

யுவன் சங்கர்ராஜா பேசும்போது, விஷாலின் இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். இதனையடுத்து பேசிய விஷால்," து.ப. சரவணனின் 'எது தேவையோ அதுவே தர்மம்' என்ற குறும் படம் பார்த்தேன். ரொம்ப பிடிச்சிருந்தது. அவரை கூப்பிட்டு பாராட்டினேன். அவரிடம், நல்ல கதை இருந்தால் கூறுங்கள் என்றேன். அப்படி உருவானது தான் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தில் எனக்கு பிடித்தது கதையை விட திரைக்கதை தான். சரவணனுக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரை கமலா சினிமாஸ் திரையரங்கம் இல்லை, கோவில்" என உணர்ச்சிகரமாக தனது பேச்சை நிறைவு செய்தார்.

ALSO READ | வலிமையுடன் போட்டிபோட தயாராகும் விஷால் படம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News