ஆமிர் கான் நண்பராக நடிக்கும் விஜய் சேதுபதி; எந்த படத்தில்?

பாலிவுட் நடிகர் ஆமிர் கான் நடிப்பில் உருவாகி வரும் 'லால் சிங்க் சத்தா' திரைப்படத்தில் அவரது நண்பராக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Updated: Aug 20, 2019, 02:22 PM IST
ஆமிர் கான் நண்பராக நடிக்கும் விஜய் சேதுபதி; எந்த படத்தில்?

பாலிவுட் நடிகர் ஆமிர் கான் நடிப்பில் உருவாகி வரும் 'லால் சிங்க் சத்தா' திரைப்படத்தில் அவரது நண்பராக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

1994-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஆங்கில திரைப்படம் 'ஃபாரஸ்ட் கம்ப்'. இத்திரைப்படம் ஆண்டுகள் கழித்தும் உலக சினிமா ரசிகர்களால் பெரிதும் கொண்டப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தை தழுவி ஹிந்தியில் 'லால் சிங்க் சத்தா' உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் நடிகர் ஆமிர் கான் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தை 'சீக்ரட் சூப்பர்ஸ்டார்' படத்தை இயக்கிய அத்வைத் சாந்தன் இயக்குகிறார் எனவும் தகவல்கள் வெளியானது. மேலும் வியாகாம் 18 ஸ்டுடியோஸும் ஆமிர் கானும் இணைத்து இத்திரைப்படத்தை தயாரிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் ஒரு விழாவில் ஆமிர் கானுடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாக தெரிவித்தார். இந்நிலையில் அவர் தற்போது 'லால் சிங்க் சத்தா' படத்தில் ஆமிர் கானின் நண்பராக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. 

அதன்படி 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தில் இடம்பெற்ற பூப்பா கதாபத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என தெரிகிறது. மேலும் விஜய் சேதுபதியின் இந்த கதாபாத்திரம் ராணுவ வீரர் கதாப்பாத்திரம் எனவும், தமிழர் என்றும் கூறப்படுகிறது.