விஜய்சேதுபதி-யின் ‘கருப்பன்’ படப்பிடிப்பு நிறைவு

Last Updated : May 14, 2017, 03:02 PM IST
விஜய்சேதுபதி-யின் ‘கருப்பன்’ படப்பிடிப்பு நிறைவு title=

பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி, தன்யா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘கருப்பன்’. இந்தப் படத்தில் மாடுபிடி வீரராக விஜய்சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். இமான் இசையமைக்க, ஷக்தி ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்த படத்தில் பாபிசிம்ஹா வில்லனாக நடிக்கிறார். 

இந்நிலையில் ‘கருப்பன்’ படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளது. தற்போது இறுதிகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அனேகமாக படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த படத்தின் இயக்குனர் பன்னீர் செல்வம் ஏற்கனவே ரேணிகுண்டா, 18 வயசு ஆகிய படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News