விரைவில் முடிவுக்கு வருகிறதா ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர்..? சோகத்தில் ரசிகர்கள்..!

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களை காண பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். 

Written by - Yuvashree | Last Updated : Aug 12, 2023, 07:30 AM IST
  • விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான தொடர்களுள் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.
  • இத்தொடர் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • இந்த தொடர் முடிவு பெற உள்ளதா என ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.
விரைவில் முடிவுக்கு வருகிறதா ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர்..? சோகத்தில் ரசிகர்கள்..!  title=

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களை காண பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். ஜீ தமிழ் தொலைக்காட்சி, சன் டிவி, விஜய் டிவி என பல்வேறு சேனல்களிலும் எக்கச்சக்க புதுவிதமான சீரியல்கள் குவிந்து கிடக்கின்றன. அதில், பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற விஜய் தொலைக்காட்சி தொடரும் ஒன்று. 

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சுஜிதா, ஸ்டாலின், சரவண விக்ரம், வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதில், முக்கிய கதாப்பாத்திரமான ‘முல்லை’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இவர், கடந்த 2020ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, இவரது கதாப்பாத்திரத்தில் இன்னொரு பிரபல சீரியல் நடிகையான காவ்யா நடித்து வந்தார். தற்போது இவரும் விலகி விட்டதால், லாவண்யா என்பவர் இந்த கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.  

மேலும் படிக்க | ஓடிடியில் வெளியானது ‘ஆதிபுருஷ்’ திரைப்படம்..! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்..?

முடிவுக்கு வருகிறதா..? 

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கும் மேலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் ஏறிக்கொண்டே இருக்கின்றனர். குறிப்பாக, முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்த சித்ராவின் மறைவிற்கு பிறகு பலரும் இந்த தொடரை பார்க்க ஆரம்பித்து விட்டனர். இந்த தொடரில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்கள் புதிதாக ஒரு பெரிய வீட்டினை கட்டி வருகின்றனர். சமீபத்தில் சீரியல் குழுவினர் அந்த வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். அதில், தனம், சத்யமூர்த்தி உள்பட அனைத்து முக்கிய கதாப்பாத்திரங்களும் இருந்தனர். மேலும் சீரியலுக்கு பின்னால் வேலை பார்க்கும் குழுவினரும் இருந்தனர். இதனால் இந்த சீரியல் முடிவுக்கு வருகிறதா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. இதனால் அவர்கள் சாேகமடைந்துள்ளனர்.  

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இப்போதைக்கு வாய்ப்பில்லை..

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தினமும் பல விதமான திருப்பங்களை சந்தித்து வருகிறது. சகோரர்களுக்குள் சண்டை, மீண்டும் அவர்கள் ஒன்று சேருவது, பிறருக்கு ஒரு பிரச்சனை என்றால் அவர்களுக்காக முன் நிற்பது என்று இதில் குடும்ப உறுப்பினர்களுக்குள் இருக்கும் பிணைப்பை காண்பித்துக் கொண்டே இருப்பர். மேலும், டி.ஆர்.பியிலும் இந்த தொடர் நன்றாகவே செயல்பட்டு வருகிறது. அதனால் இந்த சீரியல் முடிய இப்போதைக்கு வாய்ப்பில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தற்போதைய அப்டேட்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முக்கிய கதாப்பாத்திரமான தனம் (எ) தனலக்ஷமிக்கு மார்பக புற்றுநோய் இருப்பது சில வாரங்களுக்கு முன்பு ஒரு எபிசாேடில் தெரிய வந்தது. இந்த விஷயத்தை தனம் குடும்பத்தாரிடம் இருந்து மறைத்து வந்த நிலையில், அவர்களுக்கு இந்த உண்மை சமீபத்தில் தெரிய வந்தது. இதையடுத்து சில எபிசோடுகளுக்கு முன்னர் தனத்திற்கு ஆப்ரேஷன் நடைப்பெற்றது. அவரது நிலை எப்படி உள்ளது? கேன்ஸர் பாதிப்பில் இருந்து அவர் குணமானாரா? என்பது அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரிய வரும். 

கதை:

சத்யமூர்த்தி, ஜீவானந்தம், கதிரவன் மற்றும் ஜெயகுமார் ஆகிய நான்கு அண்ணன் தம்பிகள் நடத்தி வரும் மல்லிகை கடைக்கு பெயர்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இவர்களின் கூட்டு குடும்பத்தையும் இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையையும் காண்பிப்பதே இந்த தொடரின் கதை. குடும்பம், காதல், வாழ்வியல் பிரச்சனைகள் என பல இயல்பு வாழ்க்கைக்கான பல பரிமானங்களை இந்த தொடர் எடுத்துக்காட்டுவதாக ரசிகர்கள் கருதுகின்றனர். 

படக்குழு:

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், பெரிய அண்ணனான சத்யமூர்த்தி கதாப்பாத்திரத்தில் ஸ்டாலின் முத்து நடித்து வருகிறார். அவரது மனைவியான தனலக்‌ஷ்மி கதாப்பாத்திரத்தில் சுஜிதா நடித்து வருகிறார். ஜீவா கதாப்பாத்திரத்தில் வெங்கட் ரங்கநாதனும் மீனா கதாப்பாத்திரத்தில் ஹேமாவும் நடித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | ‘ஜெயிலர்’ படம் குறித்து நெல்சனிடம் பேசிய விஜய்..! என்ன சொன்னார் தெரியுமா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News