விருமன் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனால் நடிகர் கார்த்தி ரியாக்ஷன்

விருமன் படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனால் நடிகர் கார்த்தி மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 13, 2022, 02:08 PM IST
  • விருமன் திரைப்படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ்
  • முதல் நாள் கலெக்ஷனால் படக்குழு மகிழ்ச்சி
விருமன் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனால் நடிகர் கார்த்தி ரியாக்ஷன் title=

நடிகர் கார்த்தி மீண்டும் கிராமத்து கதாநாயகனாக நடித்திருக்கும் விருமன் திரைப்படம் வெள்ளிக்கிழமை ரிலீஸானது. பிரம்மாண்ட இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார். கொம்பன் படத்தை கார்த்தியை வைத்து இயக்கிய இயக்குநர் முத்தையா, 2வது முறையாக விருமன் படத்தில் கூட்டணி சேர்ந்தார். நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கான புரோமோஷன்கள் மும்முரமாக நடைபெற்ற நிலையில், எதிர்பார்த்ததுபோலவே ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு படத்திற்கு கிடைத்துள்ளது.

தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் ரிலீஸாகியிருக்கும் கொம்பன் படம் கலெக்ஷனிலும் நல்ல வசூலை முதல் நாளில் கொடுத்திருக்கிறது. முதன்முதலாக பருத்தி வீரன் திரைப்படத்தில் அறிமுகமானது முதல் இப்போது வரை கிராமத்து கதையம்சத்தில் நடித்த கார்த்தியின் படங்கள் வசூல் ரீதியாக கணிசமான வெற்றியையாவது பெற்றுவிடும். அந்தவரிசையில் இப்போது விருமனும் இணைந்திருக்கிறது. கொம்பன் மற்றும் கடைக்குட்டி சிங்கம் ஆகிய கடைசி இரண்டு படங்கள் வசூல் ரிதீயாக வெற்றி பெற்றிருந்தாலும், விருமன் திரைப்படத்தின் முதல் நாள் கலெக்ஷன் அவற்றின் முதல் நாள் கலெக்ஷனைவிட இரண்டு மடங்கு அதிகமாக வசூல் செய்திருக்கிறது.

மேலும் படிக்க | விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் அடுத்த டூர் - எங்கே தெரியுமா?

ஏ சென்டர்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கும் விருமன், பி மற்றும் சி சென்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அவர்களுக்கு கதையும் பிடித்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் மியூசிக் மற்றும் பாடல் ரசிகர்களை குதூகலத்தில் தள்ளியிருக்கிறது. குறிப்பாக, கஞ்சாப் பூ கண்ணழகி பாடல் பலரின் ரிங்க் டோனாக இருக்கிறது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் இதேபோன்ற வரவேற்பு இருக்கும்பட்சத்தில் நல்ல கலெக்ஷன் இருக்கும் என விநியோகிஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக விருமன் படத்திற்கு கிடைத்திருக்கும் ஆதரவால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது.

மேலும் படிக்க | மனசுல சலனம் - வெளியானது வெந்து தணிந்தது காடு க்ளிம்ப்ஸ் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News