அசத்தல் சண்டைக்காட்சிகள்!! "ஆக்‌ஷன்" படத்தின் டீசர் வெளியீடு

சுந்தர். சி இயக்கத்தில், விஷால் மற்றும் தமன்னா நடிப்பில் உருவாகி வரும் "ஆக்‌ஷன்" படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Sep 13, 2019, 08:36 PM IST
அசத்தல் சண்டைக்காட்சிகள்!! "ஆக்‌ஷன்" படத்தின் டீசர் வெளியீடு
Pic Courtesy : Youtube Grab

இயக்குனரும், நடிகருமான சுந்தர். சி இயக்கத்தில், விஷால் மற்றும் தமன்னா நடிப்பில் உருவாகி வரும் "ஆக்‌ஷன்" படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. இந்த படத்தின் டீசரை நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார். இசை ஹிப் ஹாப் ஆதியும், சண்டைக்காட்சிகளை அன்பரிவ் அமைத்துள்ளனர். இந்த படத்தை பி. ரவீந்திரன் தயாரித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, யோகிபாபு, ஆகான்ஷா பூரி, கபீர் டுஹான் சிங், ராம்கி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில், அதன் சண்டைக்காட்சிகளை குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசபட்டு வருகிறது. ஹாலிவுட் படங்களுக்கு இணையான அசத்தல் ஆக்‌ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது எனக் கூறப்படுகிறது.