சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா, பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொலைகாட்சி சீரியலில் நடித்து புகழ் பெற்றவர். சென்னை நசரேத் பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த சித்ரா அங்கு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த செய்தி வெளியாகி சின்னத்திரை உலகையே உலுக்கிவருகிறது.
ஹேமந்த் ரவி என்ற தொழிலதிபருடன் சித்ராவுக்கு (Actress chitra) திருமணம் நிச்சயமாகியிருந்தது. இருவரும் ஹோட்டலில் தங்கியிருந்தார்.
2018-ம் ஆண்டு முதல் ஒரு தனியார் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து வருகிறார். இந்த சீரியல் மிகவும் பிரபலம் என்பதால், இவருக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. நேற்று இவர் சென்னை (Chennai) புறநகர் பகுதியில் படபிடிப்பு நடந்துக் கொண்டிருந்தது. எனவே, சென்னை, நசரத்பேட்டையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார் சித்ரா. அவருடன், ஹேமந்தும் தங்கியிருந்தார். 4 மாதங்கள் முன்பு ஹேமந்த்துடன் சித்ராவுக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது. அவரும் இந்த ஹோட்டலில் சித்ராவுடன் தங்கியிருந்துள்ளார்.நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சூட்டிங் (Serial shooting) முடிந்த பிறகு ஹோட்டலுக்கு திரும்பியுள்ளார் சித்ரா.
ALSO READ | VJ Chithra Suicide: பாண்டியன் ஸ்டோரேஸ் முல்லை தற்கொலை: பிரபலங்கள் அதிர்ச்சி
ஹோட்டலுக்கு வந்தவுடன் தான் குளிக்கப்போவதாக சொல்லிவிட்டு, ஹேமந்தை வெளியே நிற்கவைத்து விட்டு அறையின் கதவை மூடிக் கொண்டார். ஹேம்நாத் அறையின் வெளியே நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தார். பிறகு கதவை தட்டியபோது பதில் ஏதும் வரவில்லை. எனவே ஹேமந்த் மாற்று சாவி கொண்டு திறந்து உள்ளே போய் உள்ளார். அங்கு சித்ரா புடவையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். உடனே அவர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். ஹோட்டலுக்கு விரைந்த போலீசார் (police), சித்ராவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் தற்போது பொதுமக்கள் நம்பிக்கைக்கு மாறாக அவர்கள் நிச்சயதார்த்தம் செய்ததோடு மட்டுமல்லாமல் அக்டோபர் 19 அன்று பதிவு செய்யப்பட்ட திருமணத்தையும் நடத்தினர் என்பதையும் ஹேமந்த் வெளிப்படுத்தியுள்ளார்.தனது திருமணம் விரைவில் நடைபெறும் என்று சித்ரா (Chitra) தனது சமூக ஊடக ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார், ஆனால் அவரது வருங்கால கணவர் ஏற்கனவே அவர்களின் திருமணம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்ததாக கூறியுள்ளார்.
சித்ராவின் மரணத்திற்கான சரியான காரணத்தை அறிய ஹேமந்த் குமாரின் அறிக்கைகளின் அடிப்படையில் ஒரு ஆர்.டி.ஓ விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது, இன்ஸ்டாகிராமில் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவரது முகத்தில் எந்த சண்டையும் வெளியிடவில்லை. அவரது செல்போனும் ஆய்வு செய்யப்படுகிறது.
ALSO READ | TV Serial: பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா தற்கொலை காரணம் என்ன?
சித்ராவின் கன்னத்திலும் உடம்பிலும் இருந்த காயங்கள் அவரது மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. சித்ராவின் கன்னத்தில் இருந்த காயம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு அவருடன் அறையில் தங்கியிருந்த வருங்கால கணவரான ஹேம்நாத்திடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR