விரைவில் இந்தியன் 2 சூட்டிங்? கமலுக்காக காத்திருக்கும் சங்கர்

விக்ரம் மற்றும் ராம் சரணின் ஆர்சி15 திரைப்படங்களின் சூட்டிங் நிறைவடைந்த பிறகு இந்தியன் 2 சூட்டிங் தொடங்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 23, 2022, 12:55 PM IST
  • இந்தியன் 2 படத்தின் சூட்டிங் மீண்டும் எப்போது?
  • விக்ரம் படத்தில் பிஸியாக இருக்கிறார் கமல்ஹாசன்
  • ஆர்சி 15 படத்தை இயக்குகிறார் இயக்குநர் சங்கர்
விரைவில் இந்தியன் 2 சூட்டிங்? கமலுக்காக காத்திருக்கும் சங்கர்  title=

கமல் மற்றும் சங்கர் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்தியன் திரைப்படத்தின் பார்ட் 2, லைக்கா தயாரிப்பில் மீண்டும் உருவாகிறது. 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், 2020 ஆம் ஆண்டு திடீரென படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விபத்து ஏற்பட்டது.

மேலும் படிக்க | வலிமை படம் எப்படி? இயக்குநர் ஹெச்.வினோத் Review

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதால், படப்பிடிப்புகள் தற்காலிமாக நிறுத்தப்பட்டன. இதன்பின்னர், கமல்ஹாசன் மற்றும் சங்கர் - தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக படப்பிடிப்புகள் தொடங்கப்படாமலேயே இருந்தது. விபத்து காரணமாக இயக்குநர் சங்கர் மற்றும் கமல் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை லைக்காவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக தகவல் வெளியானது.

மேலும் படத்திற்கான பட்ஜெட்டை குறைக்குமாறு லைக்கா தரப்பில் கேட்கப்பட்டதாகவும், அதற்கு சங்கர் மறுத்ததால் விரிசல் அதிகமாகி இந்தியன் 2 கைவிடும் நிலைக்கு சென்றது. இதனிடையே கமல் பிக்பாஸ் மற்றும் விக்ரம் படங்களில் முழுமையாக கவனம் செலுத்த தொடங்கினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விக்ரம் படத்தின் படிப்பிடிப்புகள் வேகமாக நடைபெறுகிறது. இயக்குநர் சங்கர் - ராம் சரண் கூட்டணியில் ஆர்சி 15 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சங்கர் - லைக்கா சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதால், மீண்டும் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் தொடங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

கமல் விக்ரம் படப்பிடிப்பிலும், சங்கர் ஆர்சி 15 படத்திலும் பிஸியாக இருப்பதால், இந்த இரு படங்களின் சூட்டிங் முடிவடைந்த பிறகு இந்தியன் 2 படத்திற்கான சூட்டிங் தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. விவேக் இந்தப் படத்தில் நடித்திருந்தார். அவர் இப்போது மறைந்திருப்பதால் அவருக்கு பதிலாக புதிய நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார். காஜல் அகர்வாலும் கர்ப்பமாக இருப்பதால், அவரும் இந்தியன் 2 சூட்டிங்கில் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | ராஷ்மிகா மந்தானவை திருமணம் செய்கிறேனா? விஜய் தேவரகொண்டா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News