சாய்பல்லவி படத்தில் ’விபச்சார விடுதி’ காட்சியை நீக்கியது ஏன்? ரசிகர்கள் ஆதங்கம்

சாய்பல்லவி - நானி நடிப்பில் வெளியாகியிருக்கும் ’ஷியாம் சிங்கா ராய்’ திரைப்படத்தில் விபச்சார விடுதி காட்சியை நீக்கியது ஏன்? என ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 3, 2023, 08:52 AM IST
சாய்பல்லவி படத்தில் ’விபச்சார விடுதி’ காட்சியை நீக்கியது ஏன்? ரசிகர்கள் ஆதங்கம் title=

ராகுல் சாங்கிருதியன் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘ஷியாம் சிங்கா ராய்’. நானி மற்றும் சாய் பல்லவி ஆகியோர் லீட் ரோலில் நடித்திருக்கும் இந்த திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. நானி இந்த படத்தில் இரட்டைக் கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.

ALSO READ | 2022-ல் ஹிந்தியில் ரீமேக்காகும் 6 தமிழ் படங்கள்..!

தியேட்டர்களில் ரிலீஸாகும்போதே நல்ல வசூலைப் பார்த்த ’ஷியாம் சிங்கா ராய்’ நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நெட்பிளிக்ஸ் தளத்தில் கூட இடம்பெறாத ஒரு காட்சியை படக்குழு யூடியூப்பில் வெளியிட்டுள்ளது. அந்தக் காட்சியை பார்த்த ரசிகர்கள், இவ்வளவு அருமையான காட்சியை படத்தில் இருந்து ஏன் நீக்கினீர்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அப்படி அந்த காட்சியில் என்ன இருக்கிறது? என்று நீங்கள் கேட்கலாம். விலைமாதுக்கள் இருக்கும் விடுதிக்கு செல்லும் நானி, மங்கையர்கள் சூழ்ந்திருக்கும் கூட்டத்தின் நடுவே அமர்ந்திருக்கிறார். அப்போது, அவருடன் பேசும் விலைமாதுகளில் ஒருத்தி, என்னை திருமணம் செய்து கொள்வாயா? என விளையாட்டாக கேட்கிறாள். அதற்கு சற்றும் தயங்காமல் பதில் அளிக்கும் நானி, அவள் அமர்ந்திருக்கும் பக்கம் திரும்பி ‘ நிச்சயமாக.. நான் உன்னை உண்மையாக நேசிக்கும் அந்த நாளில்’ என கூறுகிறார். நானியின் பதிலை எதிர்பார்க்காத விலைமாது அமைதியாக அமர்ந்து கொள்கிறார். அவ்வளவு தான் சீன்.

ALSO READ | விஜயுடன் 3வது முறையாக மோதும் சிம்பு..! பீஸ்ட் VS வெந்து தணிந்தது காடு

இந்த சீனை யூடியூப்பில் பார்த்த நெட்டிசன்கள், சூப்பரான காட்சியை ஏன் இந்த டீம் படத்தில் இருந்து நீக்கியது?, இந்தக் காட்சி படத்தில் இருப்பதற்கு தகுதியான சீன் தானே என்றெல்லாம் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 1970-களின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்தப் படம் தேவதாசிகளின் வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படிருப்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News