அமுதாவுக்கு எதிராக நடந்த சதி.. வடிவேலு, பரமுக்கு ஷாக் கொடுத்த பாட்டி

Amudhavum Annalakshmiyum July 25 Update: அமுதாவுக்கு எதிராக நடந்த சதி.. வடிவேலு, பரமுக்கு ஷாக் கொடுத்த பாட்டி - அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 25, 2023, 12:00 PM IST
  • அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது?
  • அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
  • இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
அமுதாவுக்கு எதிராக நடந்த சதி.. வடிவேலு, பரமுக்கு ஷாக் கொடுத்த பாட்டி title=

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்  அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அமுதா செந்தில் வேலை செய்யும் ஸ்கூலுக்கு போகாமல் வேறொரு ஸ்கூலில் சேர்ந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | ஹீரோவாக அறிமுகமாகும் தோனி! அதுவும் இந்த படத்திலா?

அதாவது, செந்தில் அமுதாவிடம் எந்த ஸ்கூல்ல படிக்கிற என கேக்க அவள் சொல்ல மறுக்கிறாள். மேலும் மாணிக்கமும் கேக்க அதை சொல்ல கூடாது என சொல்லிவிட்டு நகர்கிறாள். அமுதா இரவில் கண்விழித்து படிக்க பாட்டி அதனை பார்க்கிறாள்.

இதனை தொடர்ந்து அமுதா காலையில் சாப்பாடு செய்து வைத்திருக்க, வடிவேலும் பரமுவும் அதை சாப்பிட முடியாதபடி செய்து விடுகின்றனர். அன்னம் சாப்பிட்டுவிட்டு மறுபடி அமுதாவை சமையல் செய்ய சொல்ல பாட்டியும் அமுதாவை சமையல் செய்ய சொல்லிவிட்டு கம்பை எடுத்து வடிவேலுவையும் பரமுவையும் வெளுத்து எடுக்கிறாள்.

மேலும் பாட்டி அந்த சாப்பாட்டை இருவரையும் சாப்பிட வைக்க இருவரும் சாப்பிட முடியாமல் சாப்பிடுகின்றனர். மொத்தமாக சாப்பிட வேண்டும் என்று பாட்டி அவர்களை அடித்தபடியே இருக்கிறார். பிறகு அமுதாவிடம் நீ கொஞ்சம் கவனமா இரு, நீ பள்ளிக் கூடத்துக்கு கிளம்பு என்று சொல்லி அனுப்புகிறார். 

மேலும் பாட்டி செந்திலை நீ கிளம்பலையா என கேக்க செந்தில் அனைவரிடமும் தான் வேலையை  விட்டு விட்டதாக சொல்ல அன்னம் அவனை திட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது

அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News