அமுதாவும் அன்னலட்சுமியும்: அமுதா சொன்ன வார்த்தை.. செந்திலை வெளியே தள்ளிய இளங்கோ

Amudhavum Annalakshmiyum: அமுதா சொன்ன வார்த்தை.. செந்திலை வெளியே தள்ளிய இளங்கோ..அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 8, 2023, 11:56 AM IST
  • அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது?
  • அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
  • இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
அமுதாவும் அன்னலட்சுமியும்: அமுதா சொன்ன வார்த்தை.. செந்திலை வெளியே தள்ளிய இளங்கோ title=

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அன்னம் அமுதாவிடம் பேச அவள் அமைதியாக இருக்க வடிவேல் சைகையில் அவள் காலில் விழ சொல்ல, அன்னம் விழப்போக அப்போது செந்தில் வருகிறான். 

மேலும் படிக்க | Megha Akash: தனுஷ் பட நடிகைக்கு விரைவில் திருமணம்..இவர்தான் மாப்பிள்ளையா..?

சிதம்பரம் மயங்கி விழுந்த விசயத்தை சொல்ல அமுதா பதறியபடி அங்கிருந்து கிளம்புகிறாள். இதனால் வடிவேல் தன்னுடைய திட்டம் சொதப்பியதாக வருத்தபடுகிறான். 

அதை தொடர்ந்து ஹாஸ்பிடலில் அப்பாவை ICU-வில் வைத்திருப்பதை பார்த்து அமுதா அழுகிறாள். மேலும் சிதம்பரம் வடிவேல் காலில் விழுந்ததால் மனமுடைந்து இப்படி ஆகிவிட்டார் என சொல்ல அதை கேட்டு இளங்கோ நாகு அதிர்ச்சியாகின்றனர்.

ஹாஸ்பிடல் வெளியே அன்னம், மாணிக்கம், செந்தில் மூவரும் சிதம்பரத்தை பார்க்க உள்ளே நுழைய இளங்கோ கோபத்துடன் வருகிறான். 

எங்க அப்புச்சியை அவமானப்படுத்தி விட்டு இப்ப உசிரோட இருக்காரா இல்லையான்னு பார்க்க வந்தீங்களா மரியாதையா இங்கிருந்து கிளம்பிருங்க என செந்தில் உட்பட மூவரையும் பிடித்து வெளியே தள்ளுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது

அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | திருப்பதி கோயிலில் பிரபல நடிகைக்கு முத்தம் கொடுத்த ‘ஆதிபுருஷ்’ இயக்குநர்..வைரல் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News