காவிரி பிரச்சணைக்கு தீர்வு காண, ஜல்லிக்கட்டு போராட்டத்தினை போல் மீண்டும் மெரினாவில் மக்கள் கூடியதாக தமிழக இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்!
காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பலதர போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கூறி தமிழக அரசியல் கட்சியினர் தங்கள் தரப்பிலும் போராட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காவிரி பிரச்சணைக்கு தீர்வு காண, ஜல்லிக்கட்டு போராட்டத்தினை போல் மீண்டும் மெரினாவில் மக்கள் கூடியதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களும், செய்திகளும் பரவியது. இதனையடுத்து மெரினாவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
மெரினாவில் இளைஞர்கள் சிலர் காவிரி பிரச்சணை குறித்த விழிப்புணர் வாசகங்களை ஏந்தி கோஷமிட, அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் சென்னையின் மற்ற இடங்களிலும் பொதுமக்கள் கூடி போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக கூறி நகரம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதனையடுத்து காவல்துறை ஆணையர் AK விஸ்வநாதன் அவர்கள் போராட்டங்கள் நடைப்பெறாமல் இருக்க ரோந்து பணியில் ஈடுபடவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்!