மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: டிஏ உயர்வுடன் கிராஜுவிட்டி வரம்பும் உயர்த்தப்பட்டது

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஓய்வூதிய பணிக்கொடை மற்றும் இறப்புக்கு பிறகான டெத் கிராஜுவிட்டி ஆகியவற்றுக்கான வரம்பை அரசாங்கம் 25 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதாவது இதற்கான வரம்பு 20 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

7th Pay Commission: பணிக்கொடையின் வரம்பு உயர்த்தப்பட்டது பணியாளர்களுக்கு பெரிய நிவாரணத்தை அளிக்கும். கிராஜுவிட்டி என்பது ஐந்து வருடங்கள் அல்லது அதற்கு மேல் தொடர்ந்து பணியாற்றும் ஊழியர்களுக்கு நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கும் திட்டமாக்கும். பணிக்கொடைச் சட்டம், 1972ன் படி, ஒரு ஊழியர் நிறுவனத்தில் குறைந்தது ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்தால், அவர் பணிக்கொடைப் பலன்களைப் பெறுவார்.

1 /9

மத்திய அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக பல நல்ல செய்திகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றுடன் இப்போது அவர்களுக்கு மற்றொரு நல்ல செய்தியும் வந்துள்ளது. ஊழியர்களின் பணிக்கொடைக்கான வரம்பை அரசாங்கம் உயர்த்தியுள்ளது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.   

2 /9

ஓய்வூதிய பணிக்கொடை (Retirement Gratuity) மற்றும் இறப்புக்கு பிறகான டெத் கிராஜுவிட்டி (Death Gratuity) ஆகியவற்றுக்கான வரம்பை அரசாங்கம் 25 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதாவது இதற்கான வரம்பு 20 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வரும். இது பணியாளர்களுக்கு அதிகப்படியான பலன்களை அளிக்கும். 

3 /9

மக்களவைத் தேர்தல் (Lok Sabha Elections) தொடங்கும் முன்பே ஊழியர்களின் ஜனவரி 2024 -க்கான அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தியது. 4 சதவீத அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு, தற்போது மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதமாக உள்ளது. இந்த உயர்வைத் தொடர்ந்து, ஓய்வூதிய பணிக்கொடை மற்றும் இறப்புக்கு பிறகான பணிக்கொடை ஆகியவை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டன. அகவிலைப்படி அதிகரிப்பு காரணமாக, அரசு ஊழியர்களுக்கான பல கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன, இதில் ஓய்வூதிய கிராஜுவிட்டியும் தொகையும் அடங்கும்.

4 /9

இந்த பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும் இப்போது ஜனவரி 1, 2024க்குப் பிறகு ஓய்வு பெறும் ஊழியர்கள் இந்தப் பலனைப் பெறுவார்கள். முன்னதாக, மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) அகவிலைப்படி (Dearness Allowance) 4 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதற்குப் பிறகு அவர்களது டிஏ (DA) 50 சதவீதமாக உயர்ந்தது. முன்னதாக, ஏப்ரல் 30-ஆம் தேதி பணிக்கொடை (Gratuity) உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு மே 7 ஆம் தேதி கிடப்பில் போடப்பட்டது.

5 /9

கிராஜுவிட்டி என்பது ஐந்து வருடங்கள் அல்லது அதற்கு மேல் தொடர்ந்து பணியாற்றும் ஊழியர்களுக்கு நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கும் திட்டமாக்கும். பணிக்கொடைச் சட்டம், 1972ன் படி, ஒரு ஊழியர் நிறுவனத்தில் குறைந்தது ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்தால், அவர் பணிக்கொடைப் பலன்களைப் பெறுவார்.

6 /9

அகவிலைப்படி அதிகரித்ததையடுத்து, போக்குவரத்து அலவன்ஸ், கேன்டீன் அலவன்ஸ், டெபுடேஷன் அலவன்ஸ் போன்ற இதர அலவன்ஸ்களும் 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளன. DA மற்றும் DR ஆகிய இரண்டின் அதிகரிப்பின் மூலம் அரசாங்க கருவூலத்தில் ஏற்படும் ஒட்டுமொத்த பாதிப்பு ஆண்டுக்கு ரூ.12,868.72 கோடியாக இருக்கும். 

7 /9

அரசாங்கத்தின் இந்த முடிவால் சுமார் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைகின்றனர். பணிக்கொடை மற்றும் கொடுப்பனவுகளின் அதிகரிப்பு, நிதிப் பாதுகாப்பை வழங்குவதையும், வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பை பணியாளர்கள் சமாளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

8 /9

இதுமட்டுமின்றி ஜூலை மாதத்தில் அகவிலைப்படி குறைந்தபட்சம் 4% அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. எனினும், ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீடு (AICPI Index) தரவு வந்தவுடன்தான் டிஏ உயர்வு (DA Hike) பற்றிய தெளிவு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

9 /9

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.