புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் உயர்கிறது

7th Pay Commission Latest Update:  2021 ஆம் ஆண்டில், மத்திய அரசு ஊழியர்களில் ஊழியர்களின் ஊதியம் உயரவிருக்கிறது. எப்போது உயரும் தெரியுமா?

புதுடெல்லி: 7 வது ஊதியக்குழு பரிந்துரைகள் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த புத்தாண்டில் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கவிருக்கிறது. 2021 ஆம் ஆண்டில், மத்திய அரசு ஊழியர்களில் ஊழியர்களின் ஊதியம் உயரவிருக்கிறது. கோவிட் -19 காரணமாக, மத்திய ஊழியர்களுக்கு வழக்கமாக வழங்கும் அகவிலைப்படியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மத்திய ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் (Pensioners) 21 சதவீத வீத அகவிலைப்படி (Dearness Allowance)  கிடைக்கும். ஆனால் இப்போது அது 17 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது.  

Also Read | 7th Pay Commission Latest News: சிறப்பான வேலை வாய்ப்புகள் அறிவிப்பு!

1 /6

கொரோனா வைரஸ் பாதிப்பினால் பொருளாதார நடவடிக்கைகள் மந்தமாகியது. இதன் எதிரொலியாக, மத்திய அரசு அகவிலைப்படியை நிறுத்தியது. 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி, அகவிலைப்படி 21% ஆக வழங்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் தற்போது 17 சதவீத விகிதத்தில் வழங்கப்படுகிறது. 2021 ஜூன் வரை மத்திய அரசு இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.

2 /6

2021 ஜூன் மாதத்திற்குப் பிறகு, அகவிலைப்படியில் மத்திய அரசு மாற்றம் செய்யும் என்று நம்பப்படுகிறது. அரசின் ஊதியக்குழு பரிந்துரைகள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வாழ்வில் நேரடியாக தாக்கம் ஏற்படுத்தக்கூடியது. 2021 ஜூம் மாதத்திற்கு பிறகு மத்திய அரசு அகவிலைப்படியை ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி மாற்றும். அப்போது, சம்பளம் மற்றும் ஓய்வூதியம் அதிகரிக்கும். 

3 /6

மத்திய அரசு ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் அகவிலைப்படியில் மாறுதல்களை செய்கிறது. இந்த ஆண்டு ஜனவரியில் 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. 50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களையும் 55 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களின் மாதச் செலவில் மத்திய அரசின் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும்.  

4 /6

முன்னதாக மார்ச் மாதத்தில், அமைச்சரவை அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரித்தது. வழக்கமாக, விலைவாசி உயர்வை சமன் செய்வதற்காக அரசாங்கம் ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படியை மாற்றியமைக்கும். 

5 /6

முன்னதாக, கோவிட் தாக்கத்தினால் அமைச்சர்கள், பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 30% குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கு அதிக நிதி ஒதுக்க MPLAD (Members of Parliament Local Area Development Scheme) திட்டமும் இரண்டு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

6 /6

தேசிய தலைநகர் டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) அரசாங்கம் இந்த ஆண்டின் இறுதியில் ஊழியர்களுக்கு பரிசை வழங்கியுள்ளது. அனைத்துவகை பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த தகவலை டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா (Manish Sisodia) தெரிவித்துள்ளார்.