7th Pay Commission எச்சரிக்கை: இந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்

7th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு அவ்வப்போது பல வித வசதிகளை வழங்குகிறது. இதில் வீடு கட்டுவதற்கு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஹவுஸ் பில்டிங் அட்வான்ஸ் (House Building Advance) வசதியும் முக்கியமான ஒன்றாகும். 

 

ஒரு மத்திய அரசு ஊழியர் அரசாங்கத்தின் இந்த வசதியின் கீழ் பணத்தைப் பெற்று, ஆனால், விதிகளின்படி வீட்டைக் கட்ட அதைப் பயன்படுத்தவில்லை என்றால், அவர்களுக்கு பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும்.

1 /5

எச்.பி.ஏ திட்டத்தின் கீழ் வீடு அல்லது பிளாட் கட்ட பணம் பெற்றுள்ள ஊழியர்கள், அரசாங்கத்தின் House Building Advance Rules (HBA)- 2017 விதி 7 பி ஐ கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விதிகள் மீறப்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தபால் துறையின் ADG (Estt) டி.கே. திரிபாதி, “எச்.பி.ஏ எடுக்கும் ஊழியர்கள் இந்த விதியை பின்பற்றுவதில்லை. விதியை பின்பற்றாவிட்டாலும், தாங்கள் தப்பித்துக்கொள்ளலாம் என்பது அவர்களது எண்ணமாக உள்ளது. ஆனால் இது தொடர்பாக அனைத்து வட்டங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அது உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.  

2 /5

இந்த விதியின் கீழ், வீடு கட்டுவதற்கான முன்பணம் வாங்கும் ஊழியர்கள், தங்கள் வீட்டை காப்பீடு செய்ய வேண்டும். அதற்கான செலவை அவர்களே ஏற்க வெண்டும். காப்பீடு செய்யப்பட்ட தொகை HBA அளவுக்கு சமமாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது. டி.கே. திரிபாதி 'விதி புத்தகத்தின்படி, வீட்டின் காப்பீட்டை காப்பீட்டு சீராக்கி ஐ.ஆர்.டி.ஏ அங்கீகரித்த காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து எடுக்க வேண்டும், மேலும் பாலிசியின் நகலை உங்கள் துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.’ என்று கூறினார்.

3 /5

HBA இன் கீழ் எடுக்கப்பட்ட காப்பீட்டுக் கொள்கை பல விபத்துக்களை உள்ளடக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக, வீட்டில் தீயால் ஏற்படும் விபத்து, வெள்ளம் மற்றும் மின்சார விபத்து போன்றவை இதில் கவர் செய்யப்படும். ஊழியர் அட்வான்ஸ் பணத்தை செலுத்தும் வரை இந்தக் கொள்கை நடைமுறையில் இருக்கும்.

4 /5

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன்பணத்தை (House Building Advance) அளிக்கிறது. இதில், பணியாளர் தனது சொந்த அல்லது மனைவியின் நிலத்தில் ஒரு வீட்டைக் கட்டுவதற்கு முன்பணம் வாங்கலாம். இந்த திட்டம் 2020 அக்டோபர் 1 முதல் தொடங்கப்பட்டது. இதன் கீழ், 2022 மார்ச் 31 வரை, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 7.9% வட்டி விகிதத்தில் வீடு கட்டுவதற்கான முன்பணம் வழங்கப்படுகிறது.

5 /5

7 வது ஊதியக்குழு மற்றும் எச்.பி.ஏ விதிகளின் பரிந்துரைகளின்படி, புதிய வீடு கட்ட அல்லது புதிய வீடு-பிளாட் வாங்க, 34 மாத அடிப்படை சம்பளம், அதிகபட்சம் ரூ .25 லட்சம் அல்லது வீட்டின் விலை அல்லது முன்பணத்தை திரும்பச் செலுத்தும் திறன் ஆகியவற்றில் எது குறைவாக இருக்கிறதோ, அந்த தொகைக்கான அட்வான்சை ஊழியர்கள் பெறலாம். அட்வான்ஸ் தொகைக்கு 7.9% வட்டி வசூலிக்கப்படுகிறது. 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியில் இருக்கும் தற்காலிக ஊழியர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.