7th Pay Commission, பயனுள்ள அண்மைத் தகவல்கள்; வீட்டு வாடகை, ஊதியம்

7 வது ஊதியக்குழு சமீபத்திய புதுப்பிப்பு: அரசு வேலை தேடுபவரா நீங்கள்? இது உங்களுக்கான நல்ல செய்தி…  உதவி இயக்குநர், தடயவியல் தணிக்கை (Forensic Audit) பதவிக்கு மத்திய அரசு சேவை ஆணையம் (UPSC) மத்திய அரசின் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

புதுடெல்லி: இந்த வேலைக்கு சம்பளம் என்ன? அகவிலைப்படி, Level-8 pay scale, வீட்டு வாடகை என பல நன்மைகள் உள்ளன. இந்த வேலைக்கு தேர்ச்சி பெறுபவருக்கு 7 வது ஊதிய கமிஷன் சலுகைகளும் கிடைக்கும்.  

Also Read | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்துள்ள பம்பர் சலுகைகள் இதோ

1 /6

இந்த வேலைக்கு சம்பளம் என்ன? அகவிலைப்படி, Level-8 pay scale, வீட்டு வாடகை என பல நன்மைகள் உள்ளன. இந்த வேலைக்கு தேர்ச்சி பெறுபவருக்கு 7 வது ஊதிய கமிஷன் சலுகைகளும் கிடைக்கும்.  

2 /6

யுபிஎஸ்சி வேலை அறிவிப்பின்படி, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 7 வது சிபிசி இணைக்கப்பட்ட நிலை -8 ஊதிய அளவில் பணியமர்த்தப்படுவார்கள். பொது மத்திய சேவை, குழு பி (கெஜட்டட்) (அமைச்சரல்லாத) சேவையில் நியமிக்கப்படுவார். டி.ஏ., எச்.ஆர்.ஏ, டி.ஏ போன்ற 7 வது ஊதிய கமிஷன் சலுகைகளைப் பெறலாம் 47,600 ரூபாய் முதல் 1,51,100 வரை சம்பளம் கிடைக்கும்.  

3 /6

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்  பட்டய கணக்காளர் அல்லது செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் அல்லது நிறுவன செயலாளர் அல்லது பட்டய நிதி ஆய்வாளர் அல்லது முதுகலை டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் (நிதி) படித்திருக்க வேண்டும். அல்லது வணிக நிர்வாகத்தில் முதுகலை (நிதி) அல்லது வணிக பொருளாதாரத்தில் முதுகலை அல்லது முதுகலை வர்த்தகம் அல்லது இளங்கலை சட்டம் என்ற படிப்புகளில் ஏதாவது ஒன்றை கல்வித் தகுதியாக கொண்டிருக்க வேண்டும்.

4 /6

இரண்டு வருட தகுதிகாண் காலம் நிறைவடைவந்த பிறகு மத்திய அரசு வழங்கும் அரசு வேலைகள் இயல்பாகவே  நிரந்தரமாகுக்ம் என்பது குறிப்பிடத்தகக்து. இந்த பணியில் சேர்ந்து நல்ல சம்பளம் பெற ஆர்வமுள்ளவர்கள், யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று மேலும் தகவல்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.  upconline.nic.in என்ற இணையதள முகவரிக்கு செல்லுங்கள்

5 /6

யுபிஎஸ்சி வேலை அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் எந்தவொரு அரசு அல்லது பட்டியலிடப்பட்ட தனியார் நிறுவனத்திடமிருந்தும் தணிக்கை அல்லது தடயவியல் தணிக்கையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  

6 /6

பொதுப்பிரிவை சேர்ந்த விண்னப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 2021 மார்ச் 4 அன்று 30 ஆண்டுகள் இருக்கலாம். பிற பிற்படுத்தப்பட்ட பிரிவைச் (ஓபிசி) சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 2021 மார்ச் நான்காம் தேதியன்று 33 வயது ஆகும்.