Aadhaar அட்டை குறித்த முக்கிய எச்சரிக்கை: உங்கள் ஆதார் அட்டை போலியா? அசலா? இப்படி சரிபார்க்கலாம்

Aadhaar Card Latest News: ஆதார் அட்டை நமது நாட்டு மக்களின் மிக முக்கியமான அடையாள ஆவணமாகும். ஆதார் அட்டை குறித்த புதுப்பிப்புகளை UIDAI அவ்வப்போது வெளியிடுகிறது. UIDAI ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. 12 இலக்கங்களைக் கொண்டுள்ள அனைத்து எண்களும் அசல் ஆதார் எண்கள் அல்ல என UIDAI எச்சரித்துள்ளது. இந்தியாவில் ஆதார் அட்டை அனைத்து பணிகளுக்கும் ஒரு  இன்றியமையாத ஆவணமாகிவிட்டது. 

1 /4

சமீப காலங்களில் ஆதார் அட்டையை நகலெடுப்பது, ஆதார் முறைகேடுகள் ஆகிய செயல்களும் அதிகரித்து வருகின்றன. இந்த மோசடியிலிருந்து பாதுகாப்பாக இருக்க, பொது மக்களுக்கு UIDAI எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதார் அட்டையை அடையாளச் சான்றாக ஏற்கும் முன் அட்டை வைத்திருப்பவரின் அடையாளத்தை சரிபார்க்க வேண்டும் என்று யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.

2 /4

சமூக ஊடகத் தளமான ட்விட்டரில் இது தொடர்பான தகவல்களைப் பகிர்ந்த UIDAI, அனைத்து 12 இலக்க எண்களும் ஆதார் எண் இல்லை என்று UIDAI எழுதியுள்ளது. ஒரு நபரின் ஆதார் எண் சரியான எண்ணா இல்லையா என்பதை UIDAI இணையதளத்தில் தெரிந்துகொள்ள முடியும் என்று UIDAI கூறியுள்ளது. இது தவிர, mAadhaar செயலியின் மூலமும் இதை தெரிந்து கொள்ளலாம்.

3 /4

ஆதார் அட்டையை ஆன்லைனிலும் ஆப்லைனிலும் வெரிஃபை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதை செய்ய பயனர்கள், resident.uidai.gov.in/verify என்ற இணைப்பிற்கு செல்ல வேண்டும். அதன் பிறகு 12 இலக்க ஆதார் எண்ணை இங்கே உள்ளிட வேண்டும். பிறகு பாதுகாப்பு குறியீடு மற்றும் கேப்ட்சாவை நிரப்பி, 'Proceed To Verify' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். கிளிக் செய்த பிறகு, 12 இலக்க எண்ணின் சரிபார்ப்பு (Number Verification) திரையில் காட்டப்படும். இதுதான் உங்கள் அசல் ஆதார் எண்.

4 /4

UIDAI அலுவலக குறிப்பின் படி, ஆதார் அட்டை வைத்திருப்பவர் ஆதார் அட்டையில் இரண்டு முறை மட்டுமே தனது பெயரை புதுப்பிக்க முடியும். இது தவிர, ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பிறந்த தேதி மற்றும் பாலினத்தை புதுப்பிக்க முடியும்.