அஜித்தின் மனைவி ஷாலினி நவம்பர் 20ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
அஜித் ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பின்பு ஷாலினி படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.
பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் ஷாலினி கலந்து கொள்வது இல்லை. அஜித்தின் படங்களை திரையரங்கில் பார்பதற்கு மட்டுமே வெளியில் வருகிறார்.
இந்நிலையில் ஷாலினி தனது குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.