நைல் நதியின் பயங்கர முதலை! 300 பேரைக் கொன்ற 'சீரியல் கில்லர்'!

நைல் நதியில் வாழும், மனிதனை உண்ணும் மாபெரும் முதலை இன்று, இது வரை 300 பேரைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. வேட்டைக்காரர்கள் அதனை பிடிக்க பெருமளவில் முயற்சிகள் செய்த போதிலும், பயங்கரமான முதலை பல ஆண்டுகளாக உயிர் பிழைத்து வந்தது. இருபது அடி நீளமுடைய முதலைக்கு குஸ்டாவ் என்ற புனைப்பெயர் வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவின் புருண்டியில் உள்ள டாங்கனிகா ஏரிக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் உள்ளூர் மக்களுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளது.

1 /6

மக்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள ராட்சத முதலையை கொல்ல பலர் முயற்சி செய்தும் யாரும் வெற்றி பெறவில்லை. குஸ்டாவ் ஒரு நூற்றாண்டுக்கு மேல் வயதானது என்ற கூற்றை சிலர் மறுக்கின்றனர். அவரது பற்கள் இன்னும் சிதையாமல் இருப்பதால்,  வயது 60 க்கு அருகில் இருக்கலாம் என்கின்றனர். குஸ்டாவ் கைப்பற்றப்படாததால், அதன் சரியான நீளம் மற்றும் எடை தெரியவில்லை. ஆனால் 2002 இல் அது 18 அடி (5.5 மீ) நீளத்திற்கு மேல் இருந்தது என்றும், 2,000 பவுண்டுகள் (910 கிலோ) எடையுள்ளதாகவும் கூறப்பட்டது. நேஷனல் ஜியோகிராஃபிக் வெளியிட்ட தகவல்களில், மக்கள் மீதான அதன் தாக்குதல்கள் விபரங்கள் 1987 வரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

2 /6

முதலையினால் புருண்டி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த முதலை உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இருப்பினும், அதன் வயது தெரியவில்லை, ஆனால் வல்லுநர்கள் இது 100 ஆண்டுகளுக்கு மேல் வயதானது என்று மதிப்பிடுகின்றனர். இந்த முதலை இன்னும் உயிருடன் தான் இருக்கிறது என நமப்படுகிறது. சிலர் முதலை இறந்து விட்டது எனக் கூறினாலும், அது இறந்ததற்கான எந்த ஆதாரமும் இது வரை இல்லை.

3 /6

முதலை பல பழங்குடியினரை தாக்கியுள்ளதால், ஒரு தொடர் கொலைகாரனாகஅதவது ‘சீரியல் கில்லர்’ என அறிவிக்கப்பட்து. இருப்பினும், எல்லா மரணங்களுக்கும் ஒரே முதலை காரணம் இல்லை என்று சிலர் நம்புகிறார்கள். அனால், இந்த கொலைகளுக்குப் பின்னால் பெரும்பாலும் இந்த முதலை தான் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். அதன் தலையில் காணப்படும் ஒரே ஒரு அடையாளக் குறி மட்டுமே அனைவருக்கும் நினைவிருக்கிறது. முதலையை வேட்டையாட முயற்சிக்கும் போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயம் காரணமாக, முதலையின் தலையில் இந்த குறி ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

4 /6

2004 ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆவணப்படமான ‘கேப்ச்சரிங் தி கில்லர் க்ரோக்’ (Capturing the Killer Croc) என்ற தலைப்பில் பயங்கரமான முதலையைப் பிடிக்கும் முயற்சியை விவரிக்கிறது. மக்களை தொடர்ந்து தாக்கி வந்ததால், அதனை பிடித்து பாதுகாப்பான நீர்நிலைகளுக்கு மாற்றுவதே நோக்கமாக இருந்தது. ஆனால், பலமுறை முயற்சி செய்தும் பலனில்லை.  

5 /6

நேரடி தூண்டில் மற்றும் அகச்சிவப்பு கேமரா மூலம் முதலையை பெரிய வலையில் சிக்க வைக்க முயன்ற குழுவினர், அதன் நடமாட்டத்தை அவதானித்தனர். முதலில், அதனை வலையில் சிக்க வைக்க ஒரு உயிருள்ள கோழியை தூண்டிலாக பயன்படுத்தினர். ஆனால், தோல்வியே மிஞ்சியது. பின்னர் கோழிக்கு பதிலாக உயிருள்ள ஆட்டை பயன்படுத்தினார். இருப்பினும், வெற்றிபெற முடியவில்லை.

6 /6

முதலை 2019 இல் கொல்லப்பட்டதாக சிலர் கூறுகின்றனர், ஆனால் இதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை, குஸ்டாவ் இன்னும் நீருக்கடியில் பதுங்கியிருக்கலாம் என்ற அச்சம் உள்ளது.