Cardamom Water Benefits: உணவுகளின் சுவையை அதிகரிக்க ஏலக்காய் பயன்படுகிறது. இது அனைவரது சமையலறைகளிலும் எளிதாக கிடைக்கும் ஒரு மசாலா பொருளாகும். ஏலக்காய் சுவைக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை. இதில் பல விதமான சத்துக்கள் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
ஏலக்காய் மட்டுமல்லாமல் ஏலக்காய் தண்ணீரும் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், ஏலக்காய் தண்ணீர் குடிப்பது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். ஏலக்காய் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
உங்களுக்கு உடல் பருமன் பிரச்சனை இருந்தால், நீங்கள் ஏலக்காய் தண்ணீரை உட்கொள்ளலாம். ஏனெனில் ஏலக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நார்ச்சத்து மற்றும் பிற முக்கிய சத்துக்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. எனவே, உடல் எடையை குறைக்க இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
ஏலக்காயில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செரிமான அமைப்பை வலுப்படுத்துவதோடு வயிற்று வலி போன்ற பிரச்சனைகளையும் குறைக்க உதவுகிறது. மறுபுறம், உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், நீங்கள் தொடர்ந்து ஏலக்காய் தண்ணீரை உட்கொள்ளலாம். இதனால் இந்த பிரச்சனையில் நிவாரணம் கிடைக்கும்.
கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்கள் தினமும் ஏலக்காய் தண்ணீரை உட்கொள்ள வேண்டும். ஏலக்காய் நீர், கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்து இதயம் தொடர்பான நோய்களையும் குறைக்கிறது.
ஏலக்காய் நீர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆகையால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏலக்காய் நீரை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)