Top 6 Indian Cricketers : சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய பிளேயர்கள் பார்த்து பயப்பட்ட ஆறு இந்திய பிளேயர்களை தெரிந்து கொள்ளுங்கள்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பிளேயர்களே பார்த்து பயப்படும் 6 இந்திய பிளேயர்கள் இவர்கள் தான்
ரோகித் சர்மா ; ஆஸ்திரேலிய அணி பிளேயர்கள் பார்த்து பயப்படும் இன்னொரு இந்திய கிரிக்கெட் வீரர். அந்த அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 200 ரன்களை அடித்த முதல் இந்திய வீரர். ஒருநாள், டி20, டெஸ்ட் என எந்த வடிவ கிரிக்கெட்டாக இருந்தாலும் தலைவலி கொடுக்கும் பிளேயர் ரோகித் சர்மா.
விராட் கோலி ; இந்த தலைமுறை பேட்ஸ்மேன்களில் ஆஸி அணி பார்த்து மிக முக்கியமான பிளேயர் விராட் கோலி. அந்த அணிக்கு எதிரான போட்டி என்றால் வரிந்து கட்டிக்கொண்டு ஆடுவார். தோனியுடன் சேர்ந்து ஆஸி அடித்த 350 ரன்களுக்கு மேலான இலக்கை அசால்டாக சேஸிங் செய்தார் விராட் கோலி. அதுவே இந்திய அணி ஆஸி அணிக்கு எதிராக குறைந்த பந்துகளில் சேஸிங் செய்த போட்டியாகவும் அமைந்தது.
ஹர்பஜன் சிங் : 90களின் பிற்பகுதி மற்றும் 2000களின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லா நாட்டு பிளேயர்களையும் மிக மோசமாக ஸ்லெட்ஜிங் செய்வார்கள். போட்டியில் வெற்றி பெற அவர்கள் கடைபிடித்த யுக்திக்கு சரியான பதிலடி ஆன்ஸ்பாட்டில் கொடுப்பவர் ஹர்பஜன் சிங். இதனாலேயே பலமுறை சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார். அதேநேரத்தில் பந்துவீச்சிலும் அற்புதமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வீசுவார். ரிக்கிப் பாண்டிங் விக்கெட்டை அதிகமுறை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் இவரும் ஒருவர்
ராகுல் டிராவிட் ; இந்திய அணியின் தடுப்புச் சுவர். இவர் தான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பல முக்கிய போட்டிகள் தோல்வி அடையாமல் நங்கூரம்போல் களத்தில் நின்று காப்பாற்றியவர். 150 கிமீ வேகத்தில் பிரெட் லீ பந்துவீசும்போது, அசால்டாக ஸ்டோக் வைத்து அவரை கடுப்பேற்றுவார். திட்டுவது அவர்கள் பாணி என்றால், ஸ்டோக் வைத்து கடுப்பேற்றுவது டிராவிட் பாணி. ஆஸி அணிக்கு எதிராக ஒருமுறை 90 பந்துகளுக்கும் மேல் விளையாடி முதல் ரன்னை எடுத்தார் டிராவிட். இவரது விக்கெட்டை எடுத்தால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்திவிடலாம் என்ற அந்த அணி கணக்கு போடுமளவுக்கு அபாயகரமான பிளேயராக இருந்தார் டிராவிட்.
விவிஎஸ் லக்ஷ்மண் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக ஆடகூடிய லக்ஷ்மண், அந்த அணிக்கு எதிராக பல சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடியிருக்கிறார். டெஸ்டில் இவருடைய விக்கெட் எடுக்க படாதபாடு பட்டிருக்கிறார்கள் பலமுறை. ஆஸ்திரேலிய வீரர்கள் வார்த்தையில் கடுமை காட்டும்போதெல்லாம் பேட்டிங் மூலம் பதிலளித்தவர் லக்ஷ்மண். ஆஸி அணிக்கு எதிராக டிராவிட்டுடன் சேர்ந்து இவர் ஆடிய இன்னிங்ஸ் எல்லாம் இளம் தலைமுறையினருக்கான மிகப்பெரிய கிரிக்கெட் பாடம்.
சச்சின் டெண்டுல்கர் ; ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடுவது என்றால் இவருக்கு மிகவும் பிடிக்கும். உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் மெக்ரத், கில்லெஸ்பி, பிரெட் லீ, ஷேன் வார்னே போன்றோர் ஆக்ரோஷமாக பந்துவீசும்போது, தனி ஒருவராக இருந்து பல சூப்பரான இன்னிங்ஸ்களை விளையாடியிருக்கிறார் டெண்டுல்கர். ஒருநாள், டெஸ்ட் என இரண்டு வடிவங்களிலும் ஆஸ்திரேலிய அணிக்குஎதிராக பல சாதனைகளை வைத்திருக்கிறார் சச்சின்