Amazon Great Freedom Festival Sale: அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல், நாட்டின் மிகப் பெரிய மற்றும் அனைவருக்கும் விருப்பமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றான அமேசானில் இன்று அதாவது ஆகஸ்ட் 6, 2022 அன்று தொடங்கியது. ஆகஸ்ட் 10, 2022 வரை நடைபெறும் இந்த விற்பனையில், வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த பொருட்களை மலிவாக வாங்கலாம். நீங்கள் குறைந்த பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், உங்களுக்காகவே இந்த விற்பனையில் ஐந்து சிறந்த ஸ்மார்ட்போன் டீல்கள் உள்ளன. இதில் வாடிக்கையாளர்கள் சிறந்த பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை மலிவு விலையில் பெறலாம்.
ஒன்பிளஸ் நார்ட் சிஇ 2 லைட் 5ஜி: ஒன்பிளஸ் வழங்கும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய இந்த 5ஜி போன் ரூ.19,999க்கு பதிலாக ரூ.18,999க்கு விற்கப்படுகிறது. எஸ்பிஐ-யின் கிரெடிட் கார்டு மூலம் இதை வாங்கினால், மேலும் ஆயிரக்கணக்கில் சேமிக்க முடியும். இதைத் தவிர எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரூ.12,750 தள்ளுபடியையும் பெறலாம். ஒட்டுமொத்தமாக இந்த போனை வெறும் ரூ.7,249க்கு வாங்கலாம்.
சாம்சங் கேலக்சி எம்33 5ஜி: 24,999 ரூபாய் விலை கொண்ட இந்த சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் 18,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 6ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட இந்த போனை வாங்க எஸ்பிஐயின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் ரூ.3000 சேமிக்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையில் ரூ.12,750 தள்ளுபடி பெறலாம். இந்த வகையில் இந்த போனை ரூ.3,249-க்கு வாங்கலாம்.
ரெட்மி நோட் 11 ப்ரோ + 5ஜி: 6ஜிபி ரேம், 128ஜிபி சேமிப்பு மற்றும் 67W டர்போ சார்ஜ் ஆதரவு கொண்ட இந்த 5ஜி ஸ்மார்ட்போனை இந்த விற்பனையில் ரூ.18,999க்கு வாங்கலாம். அதன் அசல் விலை ரூ.24,999 ஆகும். எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். பழைய போனுக்கு பதிலாக இதை வாங்கினால் ரூ.14,750 சேமிக்க முடியும். இந்த வகையில் இந்த போனை வெறும் ரூ.3,249க்கு வாங்கலாம்.
iQOO Z6 5G: ரூ.20,990 மதிப்புள்ள இந்த 5ஜி ஸ்மார்ட்போனை இந்த விற்பனையில் ரூ.16,999க்கு வாங்கலாம். வங்கிச் சலுகை மூலம் ஆயிரம் ரூபாயும், கூப்பன் தள்ளுபடி மூலம் ஆயிரம் ரூபாயும், எக்ஸ்சேஞ்ச் சலுகையின் உதவியுடன் 12,750 ரூபாயும் சேமிக்க முடியும். ஒட்டுமொத்தமாக, ரூ.2,249க்கு இந்த போனை வாடிக்கையாளர்களால் வாங்க முடியும்.
ஓப்போ ஏ74 5ஜி: ஓப்போவின் இந்த 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 20,990 ஆகும். ஆனால் அமேசான் விற்பனையில் ரூ.14,990க்கு இது விற்கப்படுகிறது. எஸ்பிஐ கார்டைப் பயன்படுத்தி ரூ.750 மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் ரூ.12,750 சேமிக்கலாம். இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.1,490க்கு பெறலாம்.