சரும பராமரிப்பு என்பது மிகவும் முக்கியம். குறிப்பாக கோடை காலத்தில் முகம் வறண்டு இருக்கும். எனவே உடலை நீரேற்றமாக வைத்து கொள்வது அவசியம்.
மாய்ஸ்சரைசர் வெயில் காலத்தில் சருமத்திற்கு சிறப்பு கவனிப்பு அவசியம். பல வகையான பிரச்சனைகளும் இந்த சமயத்தில் ஏற்படுகிறது. எனவே சருமத்தை பராமரிக்க, குளித்த பிறகு முகத்தில் மாய்ஸ்சரைசர் தடவுவது நல்லது .
கற்றாழை கற்றாழை சருமத்திற்கு குளிர்ச்சி கொடுக்கும். சருமத்தை உள்ளே இருந்து ஈரப்பதத்துடன் வைத்திருக்க இது பெரிதும் உதவுகிறது.
சருமத்தைப் பாதுகாக்க இயற்கையான கற்றாழை பயன்படுத்துவது மிகவும் நல்லது. குளித்த உடனேயே தடவி வந்தால் முகத்தில் வித்தியாசமான பொலிவு காணப்படும்.
டோனர் கற்றாழை போலவே சருமத்தில் டோனரைப் பயன்படுத்துவதும் மிகவும் அவசியம். இது சருமத்திற்கு நல்ல பளபளப்பைக் கொடுக்கும். குளித்த பின் இதனை தடவினால் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
சன்ஸ்கிரீன் வெயில், மழை காலம் என எப்போதும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது. சருமத்தை பாதுகாக்க இது உதவுகிறது. வீட்டில் இருக்கும் போதும் இதனை பயன்படுத்தலாம்.
சீரம் குளித்த பிறகு மாய்ஸ்சரைசர் போலவே சீரம் தடவ வேண்டும். இதன் மூலம் அன்றைய நாள் முழுவதும் நீரேற்றமாக இருக்கலாம். இதன் மூலம் சருமத்தின் துளைகள் திறந்து உங்கள் சருமம் பளபளப்பாகத் தோன்றும்.