எச்சரிக்கை! குருவால் தொடங்குது சிக்கல்.. கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள்..

Guru Ast In March 2023: மார்ச் 31-ம் தேதி குரு மீன ராசியில் அஸ்தமிக்கப் போகிறார். மறுபுறம் ஏப்ரல் 22 ஆம் தேதி, குரு மேஷ ராசியில் பெயர்ச்சி அடைவார். இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையை மோசமாக பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

குரு அஸ்தமனம் 2023: இம்மாதம் 31ஆம் தேதி குரு அதன் சொந்த ராசியான மீன ராசியில் அஸ்தமிக்கப் போகிறார். குரு அஸ்தமனம் பல ராசிகளின் வாழ்வில் அதிர்வை ஏற்படும். இந்தக் காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் ஏற்றத் தாழ்வு, சிரமங்கள் போன்றவற்றைச் சந்திக்க நேரிடும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

1 /5

மிதுன ராசி: வியாபாரிகளுக்கு காலம் கஷ்டங்கள் நிறைந்ததாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் வியாபாரம் அல்லது கூட்டு வியாபாரம் செய்வதால் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கையில் சமநிலையை பேணுங்கள். அதே சமயம் எந்த வித விவாதத்திலும் ஈடுபட வேண்டாம்.  

2 /5

கன்னி ராசி: இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளை அதிகம் காணலாம். வாழ்க்கைத் துணையுடன் தகராறு ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் பல பிரச்சனைகள் உங்களை சூழ்ந்து கொள்ளும். எனவே மற்றவர்கள் முன் சரியாக நடந்து கொள்ளுங்கள்.  

3 /5

தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்களுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். தாயார் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடலாம்.  

4 /5

கும்ப ராசி: நெருங்கியவர்களுடனான உறவில் விரிசல் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வார்த்தைகளை சிந்தனையுடன் பயன்படுத்தவும். தன்னம்பிக்கை குறையும். இந்த காலகட்டத்தில் எந்தவிதமான முதலீட்டையும் செய்ய வேண்டாம்.  

5 /5

மீன ராசி: இந்த ராசிக்காரர்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இது மட்டுமின்றி பணியிடத்திலும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். பொருளாதார நிலை பலவீனமாக இருக்கும்.

You May Like

Sponsored by Taboola