சனி உதயம்: இந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் உண்டாகும், தலைவிதி மாறும்

Saturn Rise in March 2023: சனி பகவான் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர். ஆகையால் அவர் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். ஜனவரி 30 ஆம் தேதி, சனி கும்ப ராசியில் அஸ்தமன நிலைக்கு சென்றுள்ளார். மார்ச் 5 ஆம் தேதியன்று, சனி பகவான் மீண்டும் உதயமாவார். 

1 /5

சனி பகவான் உதயமாவதின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும். சனியின் உதயம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

2 /5

சிம்ம ராசிக்காரர்களுக்கு அவர்களின் விருப்பப்படி புதிய வேலை கிடைக்கும். உங்கள் வேலையை மக்கள் பாராட்டுவார்கள். பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கலாம்.

3 /5

கும்பத்தில் சனி அஸ்தமனமானதால், இந்த ராசியில்தான் உதயமாகும். ஆகையால் அதிகபட்ச தாக்கம் கும்ப ராசிக்காரர்களுக்குத்தான் இருக்கும். இவர்கள் பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் இப்போது தொடங்கும்.

4 /5

துலாம் ராசிக்காரர்களுக்கு சனி உதயமாவது சுபமான விளைவுகளை ஏற்படுத்தும். தொழில்-வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். 

5 /5

ஜோதிட சாஸ்திரப்படி, சனியின் உதயம் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்வில் செல்வ வளம் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கும். குறிப்பாக வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் ஈட்டுவார்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். 

You May Like

Sponsored by Taboola