கிருத்திகையில் குரு பெயர்ச்சி... பட்டையை கிள்ளப்போகும் ‘5’ ராசிகள் இவை தான்..!!

Guru Peyarchi & LUCKY Zodiacs: தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவான், அறிவு, ஞானம், திருமண யோகம் மகிழ்ச்சியான வாழ்க்கை ஆகியவற்றை வழங்கும் காரகராக கருதப்படுகிறார். குரு  பெயர்ச்சி, ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. குரு 17 ஏப்ரல் 2024 அன்று கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரித்துள்ளார்.

மே மாதம்1ம் தேதி குரு ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ள நிலையில், அதற்கு முன்னதாக, ஏப்ரல் 17ம் தேதி மதியம் 2:57 மணிக்கு கிருத்திகை நட்சத்திரத்தில்  பெயர்ச்சியாகியுள்ள நிலையில், இதனால் பலனடையப்போகும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.

1 /7

ஜோதிடத்தின் படி, கிருத்திகா நட்சத்திரம் ஆற்றல் மிக்க நட்சத்திரமாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், குரு அறிவின் ஆதாரமாகக் கருதப்படுகிறார். இந்நிலையில் கிருத்திகை நட்சத்திரத்தில் வியாழன் நுழைவது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமான பலன்களைக் கொடுக்கும். இந்நிலையில் குரு பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

2 /7

மேஷ ராசிக்காரர்களுக்கு, குரு கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரித்து சூரியனுடன் இணைவதால், தொழில் மற்றும் தனியார் துறையில் தொழில் முன்னேற்றம் அடைய நினைப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த காலகட்டத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உண்டு. அரசு ஊழியர்களுக்கும் இது நல்ல காலம். காதல் உறவுகளிலும் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். காதல் உறவுகளில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அவை நீங்கும். குழந்தைகள் படிப்பில் முதலிடம் பெறுவார்கள். 

3 /7

மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சாதகமான பலன்களை கொடுக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கை கூடும். திருமணமானவர்களின் உறவுகள் வலுவடையும். உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே இருந்த தவறான புரிதல்களும் நீங்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அலுவல பணியில் இருப்பவர்கள் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். தொழிலதிபர்களுக்கும் இது நல்ல காலம்.

4 /7

கடக ராசிக்காரர்களுக்கு குருவின் அருளால் சிறப்பாகப் பயனடைவார்கள். அரசியல் அல்லது அரசுத் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு சாதகமான நேரம். பணியிடச் சூழல் சாதகமாக இருக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். இது வணிகத்திற்கும் மிகவும் நல்ல நேரம். பல புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். வருமானம் அதிகரிப்பதால், நிதி நிலைமை வலுவாகும்

5 /7

சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி தொழில் ரீதியாக  மிகவும் சாதகமான நேரம். புதிய தொழில் தொடங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கும் இந்த நேரத்தில் லாபம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், வேலை தேடுபவர்களுக்கும் வேலை கிடைக்கும். முதலீட்டில் நல்ல லாபம் பெற வாய்ப்பு உள்ளது. குரு கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உண்டாகும் யோகம் அபரிமிதமான செல்வத்தை அளிக்கும்.

6 /7

தனுசு ராசிக்காரர்களும் இந்த நேரத்தில் நல்ல செய்திகளைப் பெறலாம். குழந்தைப் பேறு விரும்புவோருக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்க நல்ல காலம்.  விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பொருளாதார அம்சமும் வலுவாக இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். வணிகத்தில் ஒரு புதிய கூட்டாண்மை மூலம், எதிர்காலத்தில் நன்மை பயக்கும்.  திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரலாம். வெளியூர் பயண முயற்சிகளும் வெற்றி பெறும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவார்கள். ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு.

7 /7

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.