Helath News: பலாப்பழம் சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகள்

முக்கனிகளில் ஒன்று பலா. பலாப்பழம் பல சத்துக்களை கொண்டுள்ளது. பலாவை காயாகவும் சமைத்து சாப்பிடலாம், பழமாகவும் சாப்பிடலாம்.

முக்கனிகளின் மூன்றிலும் உள்ள தனிச்சிறப்பு இது. மாங்காயை, காயாகவும் சாப்பிடலாம், ஊறுகாயாக போட்டு வைத்து நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாத்து உணவில் பயன்படுத்தலாம். 
அதேபோல், வாழைக்காயை ஒரு காயாகவும் பயன்படுத்தலாம், பழமாகவும் பயன்படுத்தலாம். பலாவின் நன்மைகளோ பட்டியலில் அடங்காதது. பலாக்காயை சமைத்து சாப்பிட்டால் அதிலுள்ள நார்ச்சத்துக்கள் உடலுக்கு அளப்பரிய நன்மைகளைத் தரும். 

Also Read | Immunity Booster: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பலாப்பழம்

1 /5

பலாப்பழம் சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், இது நம் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளையும் தருகிறது. பொட்டாசியம், இரும்பு, கால்சியம், துத்தநாகம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை பலாப்பழத்தில் ஏராளமாகக் காணப்படுகின்றன, ஆனால் பலாப்பழம் சாப்பிட்ட பிறகு சில உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடாது. மீறினால், அது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.  

2 /5

பப்பாளி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால், பலாப்பழம் சாப்பிட்ட பிறகு அதை உட்கொண்டால், அது உங்கள் உடலில் அழற்சியை ஏற்படுத்தும். எனவே, பலாவை சுவைத்த பிறகு குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்து பப்பாளியை சாப்பிடலாம்.  

3 /5

 பலாவை காயாக சமைத்து சாப்பிடும்போது, அதனுடன் வேறு எந்த காய்கறியையும் சாப்பிடலாம். ஆனால், வெண்டைக்காயை மட்டும் சாப்பிடவேண்டாம். பலாப்பழத்துடன் வெண்டைக்காயை உட்கொண்டால், சருமப் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தோலில் வெண் திட்டுகள் தோன்றும்.

4 /5

பலாப்பழம் சாப்பிட்ட பிறகு பால் குடிக்கக்கூடாது. வட இந்தியாவின் பல மாநிலங்களில், உணவுடன் அல்லது உணவு சாப்பிட்ட பிறகு பால் அருந்துவது வழக்கம். ஆனால் பலாப்பழம் சாப்பிட்ட பிறகு, நீங்கள் உடனடியாக பால் குடிக்கக்கூடாது. அப்படி குடித்தால், அது தாங்க முடியாத வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.

5 /5

பலாப்பழம் சாப்பிட்ட பிறகு தேன் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் சுவையான தேன் உடலுக்கு பற்பல ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடியது. சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தலாம். பலாப்பழத்திற்குப் பிறகு தேன் சாப்பிடக்கூடாது, இது உங்கள் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும். ஆனால் தேனில் ஊறிய பலா மிகவும் சுவையாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் என்ற குழப்பம் வருகிறதா? அது சர்க்கரை நோய் என்ற நீரிழிவு நோய் வராத காலத்தில் சொன்ன உணவுக் குறிப்பு. இன்றைய காலகட்டத்தில் அது சரியாக வராது. தேன் மற்றும் பலாப்பழம் இரண்டுமே இனிப்புச்சுவை கொண்டவை. இரண்டையும் ஒன்றாக சேர்த்து உண்பதால் அது எதிர்விளைவை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.