லட்சக்கணக்கான தீபங்களால் ராமரை வரவேற்கும் அயோத்தியா தீபாவளி

Deepotsav 2022: வனவாசம் முடிந்து ராமரை வீட்டிற்கு வரவேற்கும் விதமாக தீபாவளி கொண்டாடப்படுவதாக வட இந்தியர்கள் நம்புகின்றனர்.

ராவணனை வதைத்து சீதையை மீட்டு, வனவாசம் முடித்து, அயோத்தியாவில் வெற்றி வீரராக வரும் ராமரை வரவேற்க வீடுகள் தோறும் விளக்கேற்றுகின்றனர். இது 2022ம் ஆண்டு தீபாவளியின் தீப வரிசைகள்...

மேலும் படிக்க | தீபாவளிக்கு நாயை வணங்கும் நாடு! மகாபாரதத்தை போற்றும் நேபாள நாட்டின் நாய் தீபாவளி

 

1 /5

சரயு நதிக்கரையில் தீபங்கள்... தீபாவளி பண்டிகையை காண ஏராளமான பொதுமக்கள் காத்திருந்தனர்.

2 /5

அயோத்தியில் தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று பிரமாண்டமான தீப ஒளி நாள் கொண்டாடப்படுகிறது, இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த விழாவில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மோடியை வரவேற்க்கிறார்.  

3 /5

அயோத்தியில் ஞாயிற்றுக்கிழமை மாலை ‘தீபாவளி’ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அயோத்தியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படும். ராம ஜென்மபூமியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் நடைபெற்று வரும் பணிகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமரிடம் காண்பிப்பார். பிரதமரின் வருகையையொட்டி அயோத்தி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

4 /5

சரயு நதியின் கரைகளில் மொத்தம் 37 இடங்களில் சுமார் 15 லட்சம் விளக்குகள் ஏற்றப்படுகிறது. அயோத்தி நிர்வாகம் 15 லட்சம் தீபங்களை ஏற்றி புதிய கின்னஸ் சாதனை படைக்க முயற்சிக்கும். முக்கியமான இடங்களில் மேலும் மூன்று லட்சம் தீபங்கள் ஏற்றப்படும்.

5 /5

அயோத்தி நிர்வாகம் கடந்த ஆண்டு 9,41,551 தீபங்களை ஏற்றி உலக சாதனை படைத்தது. ஆனால் உஜ்ஜயினியில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில் மகாசிவராத்திரி அன்று 11,71,78 தீபங்கள் ஏற்றி இந்த சாதனை முறியடிக்கப்பட்டது. சரயு நதிக்கரையில் நடைபெறும் ஆரத்தியில் பிரதமரும் கலந்து கொள்கிறார். ராமாயணத்தின் பல காட்சிகளை சித்தரிக்கும் லேசர் ஷோ, ராம் கி பைடி கரையில் நடத்தப்படும்.