High Cholesterol Control: உடலில் அதிகமாக உள்ள கொழுப்பு தேவையில்லாத ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்தும். அதை தவிர்க்க எளிய வழிமுறைகள் இவை...
கெட்டக் கொழுப்பை சுலபமாக குறைக்க வழிகள் இவை... இந்த வழிகளில் 10 நாட்களிலேயே கொலஸ்ட்ரால் குறையத் தொடங்கிவிடும்...
மேலும் படிக்க | பயத்தம் பருப்பின் அபூர்வ நன்மைகள்: பல நோய்களுக்கு தீர்வு காணலாம்
வயிற்றைச் சுற்றி படியும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உணவில் சிறப்பு கவனம் தேவை. மேலும், சர்க்கரையிலிருந்து விலகி இருப்பது நல்லது என்று சுகாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
உடல் எடையைக் குறைக்க விரும்புவோர், வயிற்றைச் சுற்றியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்னையால் அவதிப்படுபவர்கள், தினமும் டீ குடிப்பதற்குப் பதிலாக, அதிக சத்துக்கள் உள்ள கிரீன் டீயை எடுத்துக்கொள்வது நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக க்ரீன் டீயை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பலர் வெளி உணவுகளை அதிகமாக உட்கொள்கின்றனர். இதுவும் கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது. கலப்பட எண்ணெய்களால் தயாரிக்கப்படும் உணவாக இருந்தால் உடலைக் கெடுத்துவிடும்.
கொலஸ்ட்ராலைக் குறைக்க உடற்பயிற்சி செய்வது உடல் நலக் கோளாறுகளை நீக்குவது மட்டுமின்றி வயிற்றைச் சுற்றியுள்ள கொலஸ்ட்ராலையும் எளிதாகக் குறைக்கிறது. எனவே உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை குறைவது மட்டுமின்றி, உடல் வலிமையடையும். கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் எளிதில் குறைக்கப்படுகின்றன. ஆனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உடற்பயிற்சியுடன் பால் மற்றும் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்