இன்று தமிழகம் முழுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு! ஏன் தெரியுமா?

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

 

1 /5

டிசம்பர் 6, 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பிறகு இந்தியா சந்தித்த மிகப் பெரிய சோகம் என்று கூறப்படுகிறது.  

2 /5

அரசியலமைப்பு மீது நம்பிக்கை வைத்திருந்த இந்திய முஸ்லிம்களின் மனதில் இந்த நிகழ்வு ஆழமான காயங்களை ஏற்படுத்தியுள்ளது.  

3 /5

இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.   

4 /5

இதனால் தமிழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் 2000 போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.   

5 /5

பேருந்து நிலையங்கள், ரயில்வே, வழிபாட்டுத் தலங்கள், மார்க்கெட் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.