ஹீமோகுளோபினை அதிகரிக்க பீட்ரூட் உதவுகிறது, இதனை ஒரே மாதிரியாக செய்யாமல் தினமும் வித்தியாசமாக சமைத்து உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.
பீட்ரூட் சப்ஜி : பீட்ரூட், சீரகம், வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு மற்றும் மசாலாக்கள் கலந்து செய்யப்படும் பீட்ரூட் சப்ஜி சுவையாக இருப்பதுடன் உடலுக்கும் ஆரோக்கியத்தை தருகிறது.
பீட்ரூட் ரைத்தா : ஆனியன் ரைத்தா போலவே பீட்ரூட், தயிர், புதினா, கேரட் போன்றவை சேர்த்து செய்யப்படும் இந்த பீட்ரூட் ரைத்தா சத்தான உணவாகவும், உடலுக்கு வலு சேர்க்கும் உணவாகவும் இருக்கும்.
பீட்ரூட் சாலட் : பொதுவாக சாலட் பலருக்கும் பிடிக்கும், பன்னீர், ஆலிவ் ஆயில், மிளகு, எலுமிச்சை, பீட்ரூட் கலந்து செய்யப்படும் இந்த பீட்ரூட் சாலட் நிச்சயம் அனைவருக்கும் பிடித்த உணவாக அமையும்.
பீட்ரூட் ஜூஸ் : இப்போது பலரும் பீட்ரூட் ஜூஸை டயட்டில் சேர்த்து வருகின்றனர். பீட்ரூட், கேரட், ஆரஞ்சு, லெமன் சேர்த்து செய்யப்படும் இந்த ஜூஸ் சுவை நன்றாக இருக்கும்.