உடல் கொழுப்பு - தொப்பை கரைய உதவும்... சில வெயிட் லாஸ் சப்பாத்திகள்

Best chapatis for Weight Loss: உடல் கொழுப்பை கரைக்க, கோதுமைக்கு பதிலாக, சிறுதானியங்களை பயன்படுத்துவது மிகவும் நன்மை பயக்கும். நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இவற்றில் நிறைந்துள்ளன. அதோடு கார்போஹைட்ரேட் என்னும் மாவுச்சத்து மிகவும் குறைவாக இருக்கும்.

உடல் பருமன் என்பது இன்றைய காலகட்டத்தில் பொதுவான பிரச்சினையாக மாறிவிட்டது. உடல் எடையை குறைப்பதில் டயட் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. டயட் சரியாக இல்லை என்றால் உடல் பருமன் குறைவது மிக கடினம்.

1 /8

Weight Loss Tips: உடல் பருமனையும் தொப்பையையும் கரைக்க, உடற்பயிற்சியோடு, நாம் சாப்பிடும் உணவும் முக்கிய பங்கு வகிக்கிறது. புரதம் நார்ச்சத்து ஆகியவை அதிகமாகவும், மாவுச்சத்து மிகவும் குறைவாகவும் உள்ள சிறுதானிய உணவுகள், உடல் பருமனை குறைப்பதில் மிகவும் நன்மை பயக்கும்.  

2 /8

உடல் எடையை குறைக்கும் சப்பாத்திகள்: சப்பாத்தி என்பது வட இந்திய உணவு என்ற நிலை மாறி, இப்போது தென்னிந்திய உணவுகளில் முக்கிய இடம் பிடித்துள்ளது. அந்த வகையில், கோதுமைக்கு பதிலாக, சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட மிகக் குறைந்த கலோரி கொண்ட சப்பாத்திகளை சாப்பிடுவதால், கிடைக்கும் பலன்கள் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.  

3 /8

ராகி: சிறுதானியங்களில் ராணி என அழைக்கப்படும் ராகி ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம். இதில் கால்ஷியம், நார்ச்சத்து இரும்புச்சத்து ஆகியவை நிறைந்து இருப்பதோடு, ஜீரணிக்கவும் மிகவும் எளிதானது. கோதுமை மாவிற்கு பதிலாக கேழ்வரகு என்னும் ராகி மாவில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தி ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும்.

4 /8

கம்பு: க்ளூட்டன் அல்லாத சிறந்த உணவான கம்பு மாவு, ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம். வயிறு நிறைந்த உணர்வை தருவதால் அடிக்கடி பசியும் ஏற்படாது. மெக்னீசியம் மற்றும் இதர அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்த கம்பு, செரிமானம் தொடர்பான பிரச்சனைகளையும் நீக்குகிறது.  

5 /8

சோளமாவு: சோளத்தில் புரதம் நார்ச்சத்து மற்றும் கால்சியம் இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளதோடு, மாவுச்சத்து இல்லை. எனவே உடல் எடையை குறைக்க சிறந்த சோள மாவு சப்பாத்தி தேர்வாக இருக்கும். சோழ மாவு செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து ரத்த சர்க்கரை அளவையும், கொலஸ்ட்ராலையும் கட்டுக்குள் வைக்கிறது

6 /8

தினை மாவு: இரும்புச்சத்து நார்ச்சத்து, கால்சியம் புரோட்டின், மெக்னீசியம் ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆகியவை நிறைந்த தினை மாவு உடல் எடையை குறைப்பதோடு முதுமையினால் ஏற்படக்கூடிய மூளை பாதிப்புகளையும் தடுக்கும் திறன் கொண்டது.  

7 /8

ஓட்ஸ்: ஓட்ஸில் நார்ச்சத்து ஏராளமாக உள்ளதால் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். இதனால், மீண்டும் மீண்டும் பசி எடுக்காமல் இருக்கும். இது எடையை குறைக்க உதவுகிறது. உடல் பருமன் மட்டுமல்லாது, இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கும். இதனால் இதய நோய் அபாயம் பெருமளவு குறையும்.  

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.