Cholesterol Control Tips: உடலில் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். நாம் உட்கொள்ளும் பலவித உணவு வகைகளால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது.
Cholesterol Control Tips: இந்நாட்களில் துரித உணவுகளின் பழக்கமும் அதிகமாகியுள்ளது. தொடர்ந்து ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதால் உடலில் கொழுப்பின் அளவும் அதிகமாகி விடுகின்றது. கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவும் சில இயற்கையான உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம். இது உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி, உடல்நலக் கோளாறுகளையும் தடுக்கிறது. இதனுடன் வளர்சிதை மாற்றமும் அதிகரிக்கிறது.
ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கின்றது. இதனால் உடலில் பல வித உபாதைகள் ஏற்படுகின்றது. உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் சில ஆரோக்கியமான உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பச்சை காய்கறிகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் டி, இரும்புச்சத்து, கால்சியம், புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க இவை உதவும். தினமும் காய்கறி சாலட் உட்கொள்வது நன்மை பயக்கும்.
இரண்டு கப் வாழைக்காயில் 10 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்க உதவுகின்றது. உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க வாழைக்காய் உட்கொள்ளலாம்.
மஞ்சள் நாள்பட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது. இதனை உட்கொள்வதால் மனித உடலில் உள்ள கொழுப்பு செல்கள் எரிக்கப்படுகின்றன. மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பல உடல்நல பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாக்கிறது. இதில் உள்ள குர்குமின் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கின்றது
20 நாட்களுக்கு தினமும் தக்காளி சாறு உட்கொள்வது அதிக எடை கொண்ட பெண்களின் உடல் உப்பசத்தையும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவும். இது அடிபோனெக்டின் என்ற புரதத்தின் அளவை அதிகரிக்கிறது, இது உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது.
இலவங்கப்பட்டை ஒரு முக்கியமான மசாலாவாக உள்ளது. இதனால் குளுக்கோஸ் செல்களுக்குள் வேகமாக நுழைகிறது. இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. தினமும் காலையில் இலவங்கப்பட்டை டீ குடிப்பது அதிக கலோரிகளை எரிக்கவும், கொழுப்பை கரைக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது.
புரதச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ள வேர்க்கடலை கொலஸ்ட்ராலை குறைக்கவும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. தினசரி குறைந்தபட்சம் 50 கிராம் வேர்கடலையை உட்கொள்வது கொழுப்பை கட்டுக்குள் வைக்கும் என சுகாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.