ஓவர் எடையை அதிரடியாய் குறைக்க உதவும் அட்டகாசமான டிப்ஸ்: ட்ரை பண்ணி பாருங்க

Weight Loss Tips: உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்கள் உடல் எடையை குறைப்பது மிக அவசியம். ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது முக்கியமாகும். 

Weight Loss Tips: உடல் பருமன் இந்த காலத்தில் பலரை பாடாய் படுத்தி வரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. தொப்பை கொழுப்பு (Belly Fat), உடல் எடை ஆகியவை நமது ஆளுமையில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பல வித உடல் உபாதைகளையும் உண்டாக்குகின்றன. உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். நம் வாழ்வில் சில முக்கிய விஷயங்களை கவனித்துக்கொண்டால், உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். எடை இழப்புக்கு (Weight Loss) உதவும் சில முக்கிய ஆரோக்கிய குறிப்புகளை பற்றி இங்கே காணலாம்.

1 /10

உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். எனினும், சில எளிய இயற்கையான வழிகளிலும், உடல் எடையை குறைக்கலாம். நமது வாழ்க்கை முறையில் சில பழக்கங்களை கண்டிப்பாக கடைபிடிப்பதும், சில பழக்கங்களை தவிர்ப்பதும் இதற்கு அவசியம்.

2 /10

உடல் எடையை குறைக்க உடல் செயல்பாடுகள் மிக அவசியம். தினமும் குறைந்தது 1/2 மணி நேரமாவது உடற்பயிற்சி (Exercise), நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, யோகானசம் என ஏதாவது ஒன்றை செய்வது மிக அவசியமாகும். இது தவிர வீட்டை சுத்தம் செய்வது, தோட்ட வேலை போன்ற வீட்டு வேலைகளும் உடல் எடையை குறைக்க வெகுவாக உதவும். 

3 /10

முடிந்தவரை இனிப்பு சுவை கொண்ட உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவும். இவை உடல் எடையை அதிகரிப்பதோடு இரத்த சர்க்கரை அளவையும் அதிகர்க்கின்றன. இனிப்புகள் கலோரிகள் வேகமாக அதிகரிக்க முக்கிய காரணங்களாகின்றன. 

4 /10

காலை வேளையில் பழங்களை சாப்பிடுவது மிக நல்லது. பொதுவாகவே பழங்கள் மற்றும் காய்கள் கலோரி அளவை அதிகரிக்காமல் நமது உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றன. ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களில் வைட்டமின்களும் தாதுக்களும் அதிகமாக உள்ளன. காலை உணவில் பழங்களை உட்கொள்வதால் உடல் எடை வேகமாக குறையத் தொடங்கும். உடல் ஆரோக்கியமும் இதனால் மேம்படும்.  

5 /10

அன்றாட டயட்டில் குறைந்தபட்சம் 20 கிராம் புரதச்சத்து இருப்பது முக்கியம் என கூறப்படுகின்றது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு புரதச்சத்து மிகவும் அவசியம். இது உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கின்றது. எடை இழப்புக்காக நாம் எடுக்கும் முயற்சிகள் நமது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

6 /10

உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிக அவசியம். உடலில் போதுமான அளவு நீரை பராமரிப்பதன் மூலம், ஆக்ஸிஜன் ஓட்டம் சீராக இருப்பதுடன் உடலின் ஆற்றல் நிலையும் மேம்படும். உடலின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உடல் வெப்பநிலையை சீராக்கவும் தண்ணீர் உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும். மேலும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவ்வப்போது பசி எடுக்கும் உணர்வையும் குறைக்கிறது. இதனால் கூடுதல் கலோரிகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகிறது.

7 /10

காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என அனைத்து வேளைகளிலும் சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளையும், காலையில் புரதச்சத்து நிறைந்த, நார்ச்சத்து நிறைந்த, உடலுக்கு ஆற்றல் மற்றும் புத்துணர்ச்சியை அளிக்கும் உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் கரோரி அளவை விரைவாக குறைத்து உடல் எடையை குறைக்க முடியும். 

8 /10

தூக்கமின்மை உடல் பருமனுக்கு மிகப்பெரிய காரணமாகின்றது. சரியான தூக்கம் இல்லையென்றால், உடல் எடை அதிகரிக்கத் தொடங்குகின்றது. சீரான தூக்கம் கார்டிசோலின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இரவில் சீகிரம் தூங்குவதும், போதுமான அளவு தூங்குவதும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவும். 

9 /10

தூங்கும் முன் காஃபின் அதிகம் உள்ள காஃபி மற்றும் மதுபானம் ஆகியவற்றை உட்கொள்வதால் தூக்கமின்மை பிரச்சனை உருவாகலாம்.  இதனால் செரிமான அமைப்பில் சீர்கேடுகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. இதுமட்டுமின்றி உடலில் கூடுதல் கலோரிகளும் சேரத் தொடங்குகின்றன. மதுபானம் உட்கொள்வதால் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைகிறது. இதன் காரணமாக உடலில் உள்ள கொழுப்பை விரைவாக குறைப்பதில் பிரச்சனை ஏற்படுகின்றது. 

10 /10

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.