இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!

சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் பலருக்கும் பிடித்தமானதாக இருக்கும், அந்த வகையில் சில படங்களே எந்த காலத்திலும் பார்ப்பதற்கு சிறந்த அனுபவத்தை தரக்கூடியதாக இருக்கும். 

 

1 /4

கார்த்திக் நரேன் இயக்கத்தில் 2016-ம் ஆண்டு வெளியான 'துருவங்கள் பதினாறு' எனும் தமிழ் திரைப்படம் சிறந்த சஸ்பென்ஸ்-த்ரில்லர் கதையம்சம் கொண்ட படமாகும்.  ஒரு ஜோடியின் மர்மமான கொலையை விசாரிக்க செல்லும் போலீஸ் அதிகாரி எதிர்கொள்ளும் சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் நகர்கிறது.  

2 /4

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2013-ம் ஆண்டு வெளியான 'த்ரிஷ்யம்' எனும் மலையாள மொழி திரைப்படம் சிறந்த க்ரைம் த்ரில்லர் படமாகும்.  மோகன் லால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம், மகிழ்ச்சியான ஒரு குடும்பத்தில் திடீரென்று நடக்கும் ஒரு செயலால் அந்த குடும்பத்தின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடுவதை காண்பிக்கிறது.  

3 /4

வெற்றிமாறன் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான 'விசாரணை' எனும் தமிழ் திரைப்படம் க்ரைம் த்ரில்லர் சஸ்பென்ஸ் எண்ணற்ற தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது.  இப்படம் எம்.சந்திரகுமாரின் லாக் அப் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.   

4 /4

பவன் குமார் இயக்கத்தில் 2018-ம் ஆண்டு வெளியான 'யு டர்ன்' ஒரு சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாகும்.  இருமொழிகளில் வெளியான இந்த படத்தில் சமந்தா மற்றும் ஆதி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.