குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அற்புதமாய் இருக்கும்: ராக்கெட் வேகத்தில் வாழ்க்கை முன்னேறும்

Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின் படி, சுப கிரகமான குரு பகவான் தனது ராசியை மாற்ற சுமார் ஒரு வருட காலம் ஆகும். அந்த வகையில், குரு 12 ராசிகளிலும் தனது சுழற்சியை முடிக்க 12 ஆண்டுகள் ஆகும். 

Guru Peyarchi Palangal: மே 1 2024, அதாவது நேற்று குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆனார். அவர் மே 14, 2025 வரை ரிஷப ராசியில் இருப்பார். திருமணம், பணம் மற்றும் தொழில் ஆகியவற்றின் காரணி கிரகமாக குரு பகவான் இருக்கிறார். குரு பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். குரு பெயர்ச்சியால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் அடுத்த ஒரு வருட காலத்திற்கு நிகழக்கூடிய மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /13

மேஷம்: குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு கோபமும் பொறுமையின்மையும் அதிகரிக்கலாம். ஆகையால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். நீங்கள் சவால்களை சந்திக்க நேரிடலாம். இருப்பினும், குரு பெயர்ச்சி உங்கள் வெற்றிக்கு வழி வகுக்கும். உங்கள் உணர்ச்சிகளை சரியான முறையில் வெளிப்படுத்துவீர்கள். இது மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் அளிக்கும். உங்கள் வாழ்க்கையில் நிதி நிலையில் வெற்றி அடைவீர்கள்.

2 /13

ரிஷபம்: குரு பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியின் கதவுகளைத் திறக்கப் போகிறது. இந்த காலத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். சிக்கல்களைத் தீர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள். நேர்மறையான அணுகுமுறையின் மூலம் உறுதியுடன் உங்கள் இலக்குகளை அடைவீர்கள். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்வில் வெற்றி கிடைக்கும். 

3 /13

மிதுனம்: ரிஷப ராசியில் குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும். ஆனால் அதிகப்படியான உற்சாகத்தைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இருக்கும். இந்த நேரத்தில் வியாபாரத்தில் எச்சரிக்கை தேவை. உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்த, நீங்கள் புதிய ஆக்கப்பூர்வமான யோசனைகளை கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். இருப்பினும், குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம்.

4 /13

கடகம்: குரு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களின் மனதில் குழப்பம் ஏற்படலாம். இந்த நேரத்தில், கடக ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை குறையும். இருப்பினும், பணியிடத்தில் உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில் மேற்கொள்ளும் தொழில் பயணங்கள் சாதகமாக இருக்கும். கடக ராசிக்காரர்களுக்கு மனதில் புதிய எண்ணங்கள் வந்து நம்பிக்கை ஏற்படும்.

5 /13

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு ரிஷப ராசியில் குரு பெயர்ச்சி அதிக நன்மை தரும். இந்த நேரத்தில், சிம்ம ராசிக்காரர்கள் முழு நம்பிக்கையுடன் இருப்பார்கள். பணி இடத்தில் மேல் அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். சிம்ம ராசிக்காரர்களின் பேச்சில் இனிமை இருக்கும். வாழ்க்கையில் சிறு தடைகள் இருந்தாலும் வருமானம் அதிகரிக்கும். 

6 /13

கன்னி: கன்னி ராசியினருக்கு ரிஷப ராசியில் குரு பெயர்ச்சி கலவையான பலன்களை அளிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம். பண விரயம் இருக்கும். நீங்கள் மற்றவர்களை விட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த காலகட்டத்தில், ஆன்மீக விஷயங்களில் உங்கள் நாட்டம் அதிகரிக்கும்.

7 /13

துலாம்: குரு பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும், ஆனால் தன்னம்பிக்கை குறையும். இந்த நேரத்தில், மற்றவர்களால் தவறாக வழிநடத்தப்படலாம், அதை கவனமாக இருந்து தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். நிதி ஆதாயம் உண்டாகும். இருப்பினும், வேலைப்பளு காரணமாக நீங்கள் மன சோர்வு மற்றும் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகளால் பாதிக்கப்படலாம்.

8 /13

விருச்சிகம்: குரு பெயர்ச்சி காலத்தில் உங்கள் மனதில் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். ஆனால் அமைதியாக இருப்பது நல்லது. நண்பருடன் சேர்ந்து தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். இதனால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் திறமை வளரும் மற்றும் உங்கள் ஆற்றல் அங்கீகரிக்கப்படும். மேலதிகாரிகளின் பாராட்டுகளையும் வெகுமதிகளையும் பெறுவீர்கள். 

9 /13

தனுசு: தனுசு ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சி காலத்தில் படைப்பாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். இந்த நேரத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். உங்கள் அறிவாற்றலை வளர்த்துக்கொள்வீர்கள். படைப்புத் துறைகள் சார்ந்த பணிகளில் உங்களை ஈடுபடுத்துவதில் கவனம் செலுத்துவீர்கள். நீண்ட கால முதலீடு செய்தால் அவற்றின் மூலம் எதிர்காலத்தில் பலன் கிடைக்கும். 

10 /13

மகரம்: குரு பெயர்ச்சி காலத்தில், மகர ராசிக்காரர்கள் முழு நம்பிக்கையுடன் இருப்பார்கள். இந்த நேரத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். மகர ராசிக்காரர்களின் வருமானமும் அதிகரிக்கும், உங்கள் வணிக முயற்சிகள் மற்றும் நிதி முதலீடுகளில் படைப்பாற்றல் மற்றும் புதுமையான யோசனைகளை இணைப்பீர்கள். உங்கள் பிள்ளைகள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். மகர ராசிக்காரர்கள் தொழில் நஷ்டம் ஏற்படாமல் இருக்க தங்கள் இலக்குகளைத் திட்டமிட வேண்டும். குரு பெயர்ச்சி உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். 

11 /13

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சொகுசு வாழ்க்கையை அளிக்கும். ஆடம்பர பொருட்கள் கொண்டு வீட்டை அலங்கரிப்பது, ஷாப்பிங் செய்வது என மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் ரியல் எஸ்டேட் மற்றும் நிலையான சொத்துக்களிலும் முதலீடு செய்வீர்கள். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். 

12 /13

மீனம்: மீன ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் சில மன அழுத்தங்களும் ஏற்படலாம். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உங்கள் இலக்கை அடைவதில் வெற்றி பெறுவீர்கள். பண வரவு அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.