ஐபிஎல் வரலாற்றில்... எந்த அணியாலும் வெளியேற்றப்படாத 5 வீரர்கள்... யார் யார் தெரியுமா?

IPL 2025 Mega Auction: ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரரை அவரின் அணி ஏலத்திற்கு வெளியேற்றாமல், தொடக்கத்தில் இருந்து கடைசி வரை ஒரு அணியில் விளையாடிய 5 வீரர்களை இங்கு காணலாம். 

  • Oct 05, 2024, 21:51 PM IST
ஐபிஎல் 2008ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது.  இந்த 17 சீசன்களில் பல அணிகள் வந்துள்ளன, மறைந்துள்ளன. பல வீரர்கள் ஜொலித்து, அப்படியே மங்கியும் இருக்கிறார்கள். அந்த வகையில், கடைசி வரை ஒரு அணியில் விளையாடும், விளையாடிய வீரர்களை இங்கு காணலாம்.
 
1 /8

ஐபிஎல் 18ஆவது சீசன் அடுத்தாண்டு கோடை காலத்தில் நடைபெற உள்ளது. அடுத்த சீசனை முன்னிட்டு விரைவில் ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடைபெற இருக்கிறது.   

2 /8

மெகா ஏலத்திற்கான விதிகள் உள்பட அனைத்தும் வெளியாகிவிட்ட நிலையில் வரும் அக். 31ஆம் தேதிக்குள் அணிகளின் தக்கவைப்பு பட்டியல் வெளியாகும். இந்தாண்டு இறுதியில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற வாய்ப்புள்ளது.   

3 /8

அந்த வகையில், ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியால் விடுவிக்கவேப்படாத வீரர்களை இங்கு காணலாம்.    

4 /8

எம்எஸ் தோனி: இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். 2008ஆம் ஆண்டில் இருந்து சிஎஸ்கே அணிக்கு விளையாடி வருகிறார். கேப்டனாக 5 ஐபிஎல் கோப்பை மட்டுமின்றி, 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் தோனி வென்றுகொடுத்துள்ளார். இவரை சிஎஸ்கே ஏலத்திற்கு விடுவித்ததே இல்லை.  

5 /8

விராட் கோலி: இவர் இல்லை என்றால் ஆர்சிபி அணிக்கு இத்தனை பெரிய ரசிகர் கூட்டம் இருந்திருக்காது. இவர் ஒருவரே ஆர்சிபியின் மொத்த அடையாளமாக திகழ்கிறார். இவர் கோப்பையை வென்று கொடுக்காமல் இருந்தாலும் அந்த அணிக்காக ரன்களை குவித்துள்ளார், குவித்தும் வருகிறார். கடந்த சீசனிலும் அதிக ரன்களை குவித்தவர்களின் பட்டியலில் விராட் கோலியே முதலிடம். இவரையும் ஆர்சிபி 2008ஆம் ஆண்டில் இருந்து விடுவித்ததே இல்லை.   

6 /8

சுனில் நரைன்: கொல்கத்தா அணி மூன்று முறை சாம்பியன்ஷிப் வென்றதுபோதும் அந்த அணியில் சுனில் நரைன் இருந்துள்ளார். மிகவும் மதிப்புவாய்ந்த வீரராக மூன்று சீசன்களில் இவர் தேர்வாகி உள்ளார். 2012ஆம் ஆண்டில் இருந்து அவர் கேகேஆர் அணிக்கு வந்தார். அதன்பின், சுனில் நரைனை கேகேஆர் விடுவிக்கவே இல்லை.   

7 /8

ரிஷப் பண்ட்: இவர் டெல்லி அணியின் தற்போதைய அடையாளம். இளம் கேப்டனாக கோப்பையை வெல்லும் துடிப்போடு வலம் வருகிறார். 2016ஆம் ஆண்டில் 19 வயது இளைஞராக டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்குள் வந்த இவர், தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முன்னணி வீரர். இவரை கடந்த 2 மெகா ஏலங்களிலும் டெல்லி தக்கவைத்தது. இவரையும் இதுவரை விடுவித்ததே இல்லை.   

8 /8

சச்சின் டெண்டுல்கர்: மும்பை இந்தியன்ஸ் அணியின் அடையாளம் இவர்தான். தான் விளையாடிய 2008ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டுவரை மும்பை அணியில்தான் அவர் விளையாடினார். அவரை மும்பை விடுவிக்கவே இல்லை. 2013இல் முதல் கோப்பையை கையில் ஏந்திய உடன் ஓய்வுபெற்றுவிட்டார்.