அட நம்புங்க: பிளிப்கார்ட் சேலில் ரூ.2000-க்கும் குறைவான விலையில் சூப்பர் ஸ்மார்ட்போன்கள்

Flipkart Big Bachat Dhamal Smartphone Offers: ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் மீண்டும் சிறந்த சலுகைகளை கொண்டு வந்துள்ளது. ஜூலை 1-ம் தேதி தொடங்கிய 'பிளிப்கார்ட் பிக் பச்சத் தமால் சேல்' மூலம் ஸ்மார்ட்போன்கள் உட்பட பல பொருட்களை மிகவும் மலிவாக வாங்கலாம். ரூ.2000-க்கும் குறைவான விலையில் நீங்கள் வாங்கக்கூடிய ஐந்து ஸ்மார்ட்போன்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /5

ரியல்மி நார்சோ 30 5ஜி: ரூ.14,999 விலை கொண்ட இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்டில் வாங்கும்போது Flipkart Axis Bank கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், ரூ.750 கேஷ்பேக் பெறுவீர்கள். மேலும் எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் ரூ.12,500 வரை சேமிக்க முடியும். ஒட்டுமொத்தமாக இந்த போனை ரூ.1,749க்கு வாங்கலாம்.

2 /5

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி: 64 ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய போகோவின் இந்த 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.12,999க்கு விற்கப்படுகிறது. பிளிப்கார்டில் எக்ஸ்சேஞ்ச் சலுகை மூலம் ரூ.12,000 வரை சேமிக்கலாம். இந்த சலுகையின் முழு பலனையும் நீங்கள் பெற்றால், இந்த போனின் விலை ரூ.999 ஆக குறையும்.

3 /5

ஒப்போ ஏ57: இந்த ஓப்போ ஸ்மார்ட்போன் ரூ.13,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. பேங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதன் மூலம், நீங்கள் ரூ.1,400 தள்ளுபடியைப் பெறலாம். முழு எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பெற்ற பின்னர் ரூ.12,500 வரை சேமிக்கலாம். இந்த வழியில், நீங்கள் ஒப்போவின் ஸ்மார்ட்போனை ரூ.99 க்கு வாங்க முடியும்.

4 /5

மோட்டோ ஜி60: ரூ.14,999 மதிப்புள்ள இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பயனர்கள் ரூ.750 தள்ளுபடியில் வாங்கலாம். மேலும், எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் பெறும்போது, ​​ரூ.12,500 தள்ளுபடி கிடைத்து, போனின் விலை ரூ.1,749 ஆக குறையும். 

5 /5

விவோ டி1 44W: இந்த விவோ ஸ்மார்ட்போனின் 128ஜிபி மாடல் ரூ.14,499க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை வாங்க, எச்டிஎப்சி வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரூ.12,500 வரை சேமிக்க முடியும். அதன் பிறகு இந்த போனை ரூ.999க்கு வாங்கலாம்.