சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி... நல்ல காலம் ஆரம்பம்

Sani Vakra Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் இயக்கங்களுக்கும் பெயர்ச்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றின் சுப மற்றும் அசுப விளைவுகள் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.

Sani Peyarchi Palangal: கிரகங்களில் மிகவும் முக்கியமானவராக கருதப்படுபவர் சனி பகவான். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் அவர் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். 2023 ஆம் ஆண்டு கும்ப ராசியில் பெயர்ச்சியான சனி பகவான் 2025ல் பெயர்ச்சியாவார். ஜூன் 20 ஆம் தேதி இரவு சனி கும்ப ராசியில் வக்கிர பெயர்ச்சி அடைய உள்ளார். சனி வக்ர பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

1 /10

ஜோதிட சாஸ்திரத்தின் படி சனிபகவான் மிகவும் மெதுவாக நகரம் கிரகமாக உள்ளார். ஒரே ராசியில் அதிக நாட்களுக்கு இருப்பதால் ராசிகளில் அவருடைய தாக்கமும் அதிகமாக இருக்கின்றது.

2 /10

தற்போது கும்ப ராசியில் இருக்கும் சனி பகவான் 29ஆம் தேதி கும்பத்திலேயே வக்ர பெயர்ச்சி அடைய உள்ளார். இது ஒரு முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது

3 /10

சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். மகிழ்ச்சியின் உச்சம் தொடுவார்கள். வாழ்க்கையில் வெற்றி மழையாய் பொழியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இங்கே காணலாம்.

4 /10

மேஷம்: சனி வக்ர பெயர்ச்சியின் காரணமாக மேஷ ராசிக்காரர்கள் அனுகூலமான பலன்களை அனுபவிப்பார்கள். இந்த பெயர்ச்சி இவர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். கடின உழைப்பிற்கான பலன் இப்போது கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் வரும்.

5 /10

ரிஷபம்: சனி பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு பலவித நன்மைகள் நடக்கும். சனி வக்ர பெயர்ச்சி இவர்களுக்கு மிகவும் சாதமாக அமையும். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ரிஷப ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பணத்தை சம்பாதித்து சேமிப்பதில் வெற்றி காண்பீர்கள். உடல்நிலை நன்றாக இருக்கும்

6 /10

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சனி வக்கிர பெயர்ச்சி பலவித நன்மைகளை அளிக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவு அதிகமாகும்.

7 /10

விருச்சிகம்: சனி வக்ர பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிக்காட்ட வாய்ப்புகள் கிடைக்கும். பண வரவு அதிகமாகும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும். தொழிலை தொடங்க வாய்ப்பு கிடைக்கும்.

8 /10

கும்பம்: சனி வக்ர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக் கொள்வீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய தொழிலைத் தொடங்கும் யோகம் உள்ளது. உங்கள் தலைமைத்துவ பண்பால் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் திறமையை வெளிக்காட்டும் நேரம் இது. வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.

9 /10

சனி பகவானின் அருள் பெற இந்த மந்திரத்தை தினமும் கூறி வரலாம்: “நீலாஞ்சன சமாபாசம், ரவிபுத்ரம் யமாக்ராஜம் சஹாயா மார்தாண்ட சம்பூதம், தம நமாமி ஷனய்ஷ்ச்சரம்”  

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.