இந்த ராசிகளுக்கு ஒரு ஆண்டு காலம் ராஜ யோகம்: குருவின் அபார அருள் கிடைக்கும்

குரு ராசி பரிவர்த்தனை 2022: ஜோதிட சாஸ்திரத்தில் வியாழன் கிரகத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. வியாழன் ராசியில் ஏற்படும் மாற்றத்தின் பலன் 12 ராசிகளிலும் தெரியும். குரு பகவானின் ராசி மாற்றம் பல ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன்களை அளிக்கப்போகிறது. வியாழன் இவ்வாண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி மீன ராசியில் நுழைந்தார். இனி குரு பகவானின் அடுத்த ராசி மாற்றம் ஏப்ரல் 2023 இல் தான் நடக்கும். அத்தகைய சூழ்நிலையில், வியாழன் கிரகம் சுமார் ஒரு வருடம் ஒரே ராசியில் இருப்பார். வியாழனின் இந்த நிலையால் பல ராசிக்காரர்கள் பலன் அடைவார்கள். அந்த ராசிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். 

1 /4

குரு பகவானின் ராசி மாற்றம் பல ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன்களை அளிக்கப்போகிறது. அந்த ராசிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.   

2 /4

வியாழன் ரிஷப ராசிக்காரர்களின் ஜாதகத்தில் 11 ஆவது வீட்டில் நுழைந்துள்ளார். இது ஜோதிடத்தில் வருமானம் மற்றும் லாபத்துக்கான ஸ்தானமாக கருதப்படுகின்றது. ஆகையால், இந்த நேரத்தில் உங்கள் வருமானம் அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. வியாழன் கிரகத்தின் தாக்கத்தால் வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.   

3 /4

வியாழன் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாழன் கிரகத்தின் அருளால் ஒரு வருடம் உங்களுக்கு பணப் பற்றாக்குறை இருக்காது. வியாழன் உங்கள் ஜாதகத்தில் பத்தாம் வீட்டில் சஞ்சரித்துள்ளார். இது வேலை மற்றும் பணிகளுக்கான ஸ்தானமாகும். ஆகையால், இந்த நேரத்தில் வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். 

4 /4

கடக ராசிக்காரர்களுக்கு வியாழன் கிரகம் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும். உங்கள் ராசியிலிருந்து வியாழன் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரித்துள்ளார். இது அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டு பயணத்திற்கான ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் இப்போது முடிவடையும். தொழில் சம்பந்தமான பயணங்கள் சாதகமாக அமையும். உணவு, ஹோட்டல்கள் அல்லது உணவகங்களுடன் தொடர்புடைய வணிகர்கள் லாபத்திற்கான வலுவான வாய்ப்புகளைக் கொண்டுள்ளனர்.  (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)