LIC பீமா ரத்னா... தினம் ₹166 முதலீட்டில் 50 லட்சம் அள்ளலாம்!

நாட்டின் மிகப் பழமையான ஆயுள் காப்பீட்டு நிறுவனமான, லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (LIC) கொண்டு வந்துள்ள பீமா ரத்னா என்ற திட்டத்தில், தினசரி ரூ. 166 செலுத்தினால் முதிர்வு காலத்தில் ரூ. 50 லட்சம் வரை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. 

1 /5

எல்ஐசியின் புதிய பீமா ரத்னா திட்டத்தின் கீழ் பிறந்த 90 நாட்கள் ஆன குழந்தை முதல் 55 வயது நபர் வரை அனைவரும் இணையலாம்.

2 /5

பீமா ரத்னா திட்டத்தில் இணைந்து தினசரி ரூ.166 , அதாவது மாதம் சுமார் ₹5000 என்ற அளவில் பிரீமியம் தொகை செலுத்தினால் முதிர்வு காலத்தில் ரூ. 50 லட்சம் வரை கிடைக்கும்.

3 /5

பீமா ரத்னா திட்டம் 15, 20 மற்றும் 25 ஆண்டுகளுக்கு பாலிசிகான பீரிமியம் செலுத்தும் வகையில் உள்ளது. பிரீமியம் தொகை செலுத்தும் காலத்திற்கு ஏற்ப தொகையும் மாறுகிறது. 

4 /5

பிரீமியம் கட்டணத்தை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுதோறும் தனிநபரின் விருப்பங்களை பொருத்து செலுத்தி கொள்ளலாம்.

5 /5

மேலும் பீரிமியம் தொகையை முழுமையாக செலுத்தவும் தேவையில்லை. 15 ஆண்டு காலத்தை தேர்வு செய்பவர்கள் வெறும் 11 ஆண்டுகளுக்கு மட்டுமே, பிரீமியம் தொகையை செலுத்த வேண்டும். அதே நேரத்தில் 20 ஆண்டு காலத்திற்கு 16 ஆண்டுகளும், 25 ஆண்டு காலத்திற்கு 21 ஆண்டுகள் மட்டுமே பிரீமியங்களைச் செலுத்த வேண்டும்.